ஆதி பகவனை சீக்கிரம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் அமீர்!

|

Ameer
வருமா வராதா என்று படத்தின் ஹீரோ ஜெயம் ரவியே விசனத்துடன் காத்திருந்த படம் அமீர் இயக்கும் ஆதி பகவன்.

ஆட்சி மாற்றத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் ஆதி பகவன். திமுக பிரமுகர்தான் தயாரிப்பாளர்.

'ஆதிபகவன்' படம் முடிந்த பின் அடுத்தடுத்த படங்கள் கவனம் செலுத்தலாம் என்ற ஆர்வத்தில், அப்படத்திற்கு தேதிகள் தேவைப்படும் போதெல்லாம் அளித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தான் முடிந்தபாடில்லை. இடையில் பெப்சி விவகாரத்தில் தலையிட்ட அமீர், அந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டி, ஸ்க்ரிப்ட் பணியையே மறந்துவிட்டார்.

இப்போது போதும்டா பெப்சி - தயாரிப்பாளர் வம்பு. நம்ம வேலையைப் பாப்போம், என்று வந்துவிட்டார்.

கோவாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று அமீர் அறிவித்த போது மொத்த படக்குழுவினருக்கும் மெத்த சந்தோஷம்.

கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் 22 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம் ஜெயம் ரவி. படம் முடியும் தருவாயில் இருப்பதால், ஹீரோயின் உள்பட யாரும் களைப்பைப் பற்றி கவலைப்படாமல் கலகலப்பாக வேலை பார்த்தார்களாம்.
 

Post a Comment