இந்தியில் ஹவுஸ்புல் 2 ஹிட்டானதால், அதன் ரீமேக்கில் நடிக்க தமிழ் ஹீரோக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் இந்தி படத்தின் ஒரிஜினல், தமிழ் படம்தான் என்பதை அறிந்ததும் ஜகா வாங்கிவிட்டனர். அக்ஷய் குமார், ஜான் ஆப்ரஹாம், அசின், ஜாக்குலைன் நடித்த இந்தி படம் ஹவுஸ்புல் 2. சமீபத்தில் வெளியாகி, ஹிட்டானது. இந்த படத்தை பார்த்த ஆர்யா, ஜீவா, விஷால் இதன் ரீமேக்கில் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இந்த படத்தை தமிழில் தங்கள் சொந்த நிறுவனம் மூலம் சேர்ந்து தயாரிக்கவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி ஜீவா கூறும்போது, இந்த படத்தை பார்த்துவிட்டு, வயிறு குலுங்க சிரித்தோம். நிறைய காமெடி காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதால் அதை தமிழுக்கேற்ப மாற்றி எடுக்கலாம். இது பற்றி டிஸ்கஷன் நடந்து வருகிறது என்றார். இந்நிலையில் ஹவுஸ்புல் 2 படம், டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்த பந்தா பரமசிவம் படத்தின் ரீமேக்தான் என்று கோடம்பாக்கத்தில் தகவல் பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே பம்மல் கே சம்பந்தம் படத்தை காப்பி அடித்து, இந்தியில் கம்பக்த் இஷ்க் என்ற படத்தை எடுத்தனர். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. அதேபோல் ஹவுஸ்புல் 2 படத்தையும் எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் அறிந்த ஆர்யா, ஜீவா, விஷால் இப்போது ரீமேக் திட்டத்தை கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜீவா கூறுகையில், பந்தா பரமசிவம் சிறு பட்ஜெட் படம். ஆனால் ஹவுஸ்புல் 2, பெரிய அளவில் உருவாகி, திறம்பட ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதுபோல் மீண்டும் இப்படத்தை ரீமேக் செய்யலாம். ஆனால் நாங்கள் மூன்று பேருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருக்கிறோம். என் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அதையெல்லாம் முடிக்க வேண்டும் என்றார்.

Post a Comment