250 அரங்குகளில் உருமி!

|

Urumi Releasing Big Way   
மலையாளத்தில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் உருமி, தமிழகம் மற்றும் உலகெங்கும் 250 அரங்குகளில் வெளியாகிறது.

ஆர்யா, பிரபுதேவா, தபு, பிருத்விராஜ், ஜெனிலியா, வித்யா பாலன், ஜெகதி ஸ்ரீகுமார் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் உருமி. வரும் மே 25 ஆம் தேதி இந்தப் படத்தை உலகெங்கும் தமிழில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணி.

வெள்ளையர் இந்தியாவுக்குள் கால் வைத்த வரலாற்றை சரித்திர ஆதாரங்களுடன் இந்தப் படத்தில் முன்வைத்துள்ளார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ஏற்கெனவே நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது தமிழிலும் அந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சந்தோஷ் சிவன் கூறினார்.
Close
 
 

Post a Comment