ஆண் குழந்தைக்கு தாயானார் ஷில்பா ஷெட்டி

|

Shilpa Shetty Raj Kundra Blessed With A Baby Boy   
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொழில் அதிபர் ராஜ் குந்தராவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷில்பா கர்ப்பம் ஆனார். அவருக்கு மே 20ம் தேதியில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நேற்றிரவு ஷில்பா வழக்கமான பரிசோதனைக்காக மேற்கு மும்பை கார் பகுதியில் உள்ள ஹிந்துஜா ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனே அட்மிட் ஆகுமாறு கூறினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக மருத்துவமனையில் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவின் தாய் சுனந்தா, தங்கை ஷமிதா ஷெட்டி உள்ளிட்ட உறவினர்கள் இருந்தனர்.

தனக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை ராஜ் குந்த்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் பிரசவம் பார்த்த மருத்துவர் கிரண் கோயல்ஹோ ஆகியோருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 4ம் தேதி தான் ஷமிதா தனது அக்கா ஷில்பாவுக்கு பிரம்மாண்டமான வளைகாப்பு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment