இந்த வாரம் திகில் வா.....ரம்!

|

Sun Tv Cinema Thriller Film Week
சன் டிவியில் இந்த வாரம் திகில் வாரமாம். இரவு 11 மணிக்கு ஒரே திகில் படமாக போட்டு மக்களை நேயர்களை பயமுறுத்தப் போகிறார்களாம்.

எம்ஜிஆர் வாரம், சிவாஜி வாரம், கலாட்டா வாரம் என்று அறிவித்து சன் டிவி இந்த வாரம் திகில் வாரம் என்று முன்னோட்டம் போடுகின்றனர். திகில் படப்பிரியர்களுக்கு இந்த வாரம் சரியான விருந்துதான்.

1980, 1990 களில் வெளிவந்த சிறப்பு வாய்ந்த திகில் படங்களை ஒளிபரப்பவுள்ளனர் இந்த வாரம் பூராவும். திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஊமை விழிகள், டிக் டிக் டிக், யார், கறுப்பு ரோஜா, நூறாவது நாள் போன்ற திரில்லர், திகில் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார். இரவு 11 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவர்கள் இதை பார்த்து பயந்து போகலாமாம்.

சிவப்பு ரோஜாக்கள் ஒரு நல்ல திகில் திரைப்படம். அதை ஸ்ரீதேவி வாரத்தில் ஒளிபரப்பி விட்டதால் இப்பொழுது அதை சேர்க்க முடியாமல் போய்விட்டது.

இதில் ஒரு சிறப்பே அந்த படத்தை பற்றி கூறும் தூரன் கந்தசாமியின் குரல்தான். திகில் வாரம் என்பதற்கேற்ப அவர் படத்தின் தலைப்பை கூறும்போது ஒரு திகிலோடு கூறுகிறார். நகைச்சுவை வாரம் போடும்போது அதற்கான தலைப்புகளை சிரித்துக் கொண்டே சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்படியோ ரசிகர்கள் பயந்தால் சரித்தான்...!
Close
 
 

Post a Comment