காட்சியின் நோக்கத்தை பார்த்து சென்சார் சர்டிபிகேட்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில், மாற்று சினிமா என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், 'வழக்கு எண்: 18/9' படம் பற்றி விவாதிக்கப்பட்டது. இயக்குனர் கே.பாக்யராஜ் இதில் பேசியதாவது: தமிழ் ரசிகர்கள், சினிமா பற்றி அறிந்தவர்கள். சரியாக விமர்சனமும் செய்பவர்கள். எனது 'சின்ன வீடு' படத்தை பார்த்து விட்டு என் பாட்டி, 'உங்கம்மா கூட குண்டுதான். அதுக்காக உங்கப்பன் இன்னொரு பெண்ணைத் தேடிப்போனானா..?'' என்று கோபமாகவே கேட்டாள். எல்லா ரசிகருக்குள்ளும் விமர்சகன் இருக்கிறான். எனவே ரசிகர்கள் நம்மைவிட புத்திசாலிகள் என்பதை இயக்குனர்கள் நினைக்க வேண்டும். 'வழக்கு எண்: 18/9' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இயக்குனரும், தயாரிப்பாளரும் இதற்காக தணிக்கை குழுவினருடன் போராடியிருக்க வேண்டும். இந்தப் படத்தில் சில காட்சிகள் 'யு/ஏ' கொடுப்பதற்கான காட்சிகளாக அமைந்திருந்தாலும் அந்த காட்சியின் நோக்கத்தை கவனத்தில் கொண்டு 'யு' சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும். இயக்குனர்கள் சங்கம் இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தி, இந்தப் படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இயக்குனர்கள் பாலு மகேந்திரா, அமீர், எஸ்.பி.ஜனநாதன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி, சமுத்திரக்கனி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


 

Post a Comment