சில நடிகைகள் வேலை பார்ப்பதில்லை : மம்தா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வாங்கிய சம்பளத்துக்குகூட சில நடிகைகள் வேலை பார்ப்பதில்லை என்றார் மம்தா மோகன்தாஸ். சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியதாவது: திருமணத்துக்கு பிறகு குடும்பத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். இதற்காக நடிப்பை  கைவிடவில்லை. நல்ல வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து நடிக்கிறேன். ஒருநாள் அதற்கும் முடிவு வரும். திருமணத்துக்கு பிறகு சம்பளம் உயர்த்திவிட்டீர்களா என்று மல்லுவுட்டில் கேட்கிறார்கள். இதை உயர்வு என்ற சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் வாங்கும் சம்பளம், இதைவிட 4 மடங்கு அதிகம். எத்தனை நாட்கள் நடிக்கிறோம் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் கணக்குப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் இது அவர்களுக்கு இழப்பாக அமைகிறது. ஏனென்றால் சில நடிகைகள் கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றபடி பாதி நாட்கள்கூட வேலை செய்வதில்லை. இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.


 

Post a Comment