ஷெரலி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கும் படம், 'வதம்'. அபுஷா ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் பற்றி இயக்குனர் எம்.மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது: 'உச்சகட்டம்', 'மூடுபனி' மாதிரியான திகில் கதை. ஹீரோ என்று யாரும் இல்லை. பூனம் கவுர்தான் நாயகி. நாவல் ஆசிரியையாக நடிக்கிறார். ஒரு மலைகிராமத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும், நாவல் ஆசிரியையான பூனம் கவுர் எழுதும் நாவலுக்கும், அவரது சொந்த வாழ்க்கைக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதுதான் கதை. பாய்ஸ் மணிகண்டன், சரவ்ஜித், ரஞ்சன் வில்லன்கள், ஏ.வெங்கடேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் மூணார் பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் நடந்தது. அமானுஷ சக்திகளோ, மாயாஜாலங்களோ, கிராபிக்ஸோ இல்லாத லாஜிக்கான க்ரைம் த்ரில்லர்.
Post a Comment