நியூயார்க் விழாவில் 3 - நேரில் பங்கேற்கும் ஐஸ்வர்யா!

|

3 Azhagarsamiyin Kudhirai Varnam
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா இயக்கிய 3, சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை, எஸ்எம் ராஜு இயக்கிய வர்ணம் உள்ளிட்ட 4 படங்கள் திரையிடப்படுகின்றன.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளமும் இந்த விழாவுக்கு தேர்வாகியுள்ளது.

மற்ற இயக்குநர்களைவிட இதில் அதிகம் சந்தோஷப்படுபவர் ஐஸ்வர்யாதான். அவர் இயக்கிய 3 படம் இங்கே கடும் விமர்சனத்துக்குள்ளானது. போதாக்குறைக்கு நஷ்டக் குரல்கள் வேறு.

ஆனால் ஒரு இயக்குநராக ஐஸ்வர்யாவின் பெயர் சொல்லுமளவுக்கு இந்தப் படம் அமைந்தது.

இந்த நிலையில், சர்வதேச பட விழாக்களில் இந்தப் படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது, புதிய இயக்குநராக ஐஸ்வர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "ஒரு இயக்குநராக இந்த செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதிய இயக்குநர் என்ற முறையில் என்னை கவுரவிக்கவிருக்கிறார்கள். வரும் மே 23 முதல் 27 வரை நடக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ளப் போகிறேன். அங்குள்ள எங்கள் குடும்ப நண்பர்களையும் பார்க்கவிருக்கிறேன்," என்றார்.

ஷூட்டிங்கில் இருப்பதால், தனுஷ் இதில் கலந்து கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் அவர் நடித்த இரு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன!
Close
 
 

Post a Comment