ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!

|

Kochadaiyaan Music June End   
இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான்.

இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தந்துள்ளார்.

படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. வரும் ஜூன் மாதம் கோச்சடையான் இசையை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

படமே செப்டம்பரில் வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ள நிலையில், ஜூன் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோச்சடையான் இசை வெளியாகவிருக்கிறது.

சோனி நிறுவனம் கோச்சடையான் இசையை வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையான் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.
Close
 
 

Post a Comment