'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

|

Ks Ravikumar Kamal Do Panchathanth 2    | சிம்ரன்   
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வந்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருக்கிறார்களாம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சிம்ரன், ஜெயராம், ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், தேவயாணி, ரமேஷ் அரவிந்த், சங்கவி, யுகி சேது, ஐஸ்வர்யா, ஸ்ரீமன், நாகேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த முழு நீள காமெடி படம் பஞ்சதந்திரம். 2002ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கவிருக்கிறார்களாம். ஆனால் ரவிக்குமார் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படத்தை மேற்பார்வையிடுவதில் பிசியாக உள்ளார்.

அதே போன்று கமல் விஸ்வரூபம் படத்தை முடிப்பதில் முனைப்பாக உள்ளார். இந்த இருவரும் அவரவர் படங்களை முடித்த பிறகு பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பஞ்சதந்திரத்தில் கமல் ஜோடியாக சிம்ரன் நடித்தார். இரண்டாம் பாகத்தின் நாயகி யாரோ தெரியவில்லை. அதேபோல் அந்த படத்தில் நடித்த கமலின் ஆஸ்தான நடிகர் நாகேஷ் தற்போது உயிரோடு இல்லை. அவர் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது தான் போட வேண்டும்.

பஞ்சதந்திரம்-2 படத்திற்கும் வசனங்கள் எழுதப்போவது கிரேஸி மோகன் தான். ஆக மனம் விட்டு சிரிக்க ஒரு படம் வரவிருக்கிறது.
Close
 
 

Post a Comment