தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!

|

59th Natioanl Award Winners Meet Dr Abdul Kalam
டெல்லி: டெல்லியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியிடம் தேசிய விருது பெற்ற கையோடு, முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் நிஜ ஹீரோவுமான டாக்டர் அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் தமிழகத்தைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள்.

இந்த ஆண்டு தேசிய விருது பெற்றவர்களில் தமிழ் சினிமா கலைஞர்கள்தான் அதிகம்.

டெல்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியிடம் விருது பெற்ற இயக்குநர்கள் சுசீந்திரன், சற்குணம், குமாரராஜா, நடிகர் அப்புக்குட்டி, எடிட்டர் ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர், விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தங்கள் படங்கள் குறித்து அப்துல் கலாமுக்கு அவர்கள் எடுத்துக் கூறினர். விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களுடனும் நீண்ட நேரம் உரையாடிய அப்துல் கலாம், படைப்புகள் மக்களுக்குப் பயனுள்ளதாகவும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாழ்த்தினார்.

பின்னர் அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார் கலாம்.
Close
 
 

Post a Comment