கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள் கொண்டாட்டம்

|

Karthi Celebrates B Day Like Leader    | தமன்னா  
கார்த்தி சிவகுமார் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்பதையும் தாண்டி திரையிலகில் கார்த்தி தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படுகிறது.

இப்படி நடிப்பில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால் அவர் மனைவியுடன் ஸ்பெஷலாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளார்.

சின்சியரான கார்த்திக்கு இன்று இரவு கேக் வெட்டி பிரம்மாண்டமான பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமி்ன்றி அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். புளியந்தோப்பில் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மேலும் வட சென்னையில் கால்பந்து போட்டி மற்றும் கபடி போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.

கார்த்தி ரசிகர்களுக்காக அவரது சகுணி படத்தில் இருந்து 2 காட்சிகள் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுணி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அலெக்ஸ் பாண்டியன் படத்தை அடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...
Close
 
 

Post a Comment