ஷில்பாவின் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது யார் தெரியுமா?

|

Guess Who Will Decide Shilpa Shetty   
ஷில்பா ஷெட்டியின் குழந்தையின் பெயரின் முதல் எழுத்தை தேர்வு செய்யும் பொறுப்பை அவரது அம்மா சுனந்தாவிடம் கொடுத்துள்ளனர்.

தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை மணந்த ஷில்பா ஷெட்டிக்கு கடந்த 21ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்காததால் பேபி கே என்று அழைக்கிறார்கள்.

குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி ராஜ் குந்த்ரா கூறுகையில்,

எனது மாமியார் சுனந்தாவுக்கு ஜோதிடம் பார்க்கத் தெரியும். அதனால் குழந்தையின் பெயரின் முதல் எழுத்தை அவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவர் என்ன எழுத்தை சொல்கிறாரோ அந்த எழுத்தில் துவங்கும் பெயரைத் தேடி வைப்போம் என்றார்.

இந்நிலையில் ஷில்பா தனது குழந்தையுடன் இன்று மதியம் 12.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கிளம்பினார். அவர்கள் வருகையை எதிர்பார்த்து மருத்துவமனை வாசலில் தவம் கிடந்த ஊடகங்களை நோக்கி ஷில்பா ஒரு பறக்கும் முத்தத்தை விட்டார். குழந்தையை ராஜ் வைத்திருந்தார். ஷில்பா நீல நிற ஆடை, மஞ்சள் நிற கைப்பை, கூலிங்கிளாஸ் போட்டு கூலாக வந்தார்.

குழந்தையை அழகாக வெள்ளைத் துணியில் கேமராவுக்கு காட்டாமல் தூக்கிச் சென்றனர்.
Close
 
 

Post a Comment