அரசியல், சினிமா தாண்டி சமையல் கலையிலும் நிபுணர்தான் இயக்குனர் சீமான் என்பது அவருடன் பழகிய பலரும் சொல்வது.
தன் தலைவர் பிரபாகரன் மாதிரியே கோழிக் குழம்பு செய்வதில் இவரை மிஞ்ச முடியாது என்பார்கள், அவர் கையால் சாப்பிட்டவர்கள்.
இப்போது தன் சமையல் நிபுணத்துவத்தை படப்பிடிப்பில் பல சினிமா கலைஞர்களும் அனுபவிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சீமான்.
ஒரு படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து வரும் சீமான், தேனியில் நடந்த படப்பிடிப்பின்போது தன் கையாலேயே சமைத்து படப்பிடிப்புக் குழுவை அசத்தினார்.
படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும் தினம் ஒரு மெனுவை சொல்லி அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்வாராம். உடனே அசத்தலாக சமைக்க ஆரம்பித்துவிடுவாராம்.
உப்புக்கறி, பிரியாணி, மீன் குழம்பு, கோழி குழம்பு என சீமான் கையால் சாப்பிட்ட படத்தின் சக நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் அதன் சுவையில் அசந்து போனார்களாம்.
படப்பிடிப்பு மட்டுமல்லாது வீட்டிலும் நேரம் கிடைக்கும்போது தாமே முன்னின்று சத்தான உணவுகளை சமைத்து தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட பலருக்கும் கொடுப்பது சீமானின் சிறப்பான குணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment