பச்சை குத்தியது அழிப்பா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை: பச்சை குத்திய பிரபுதேவா பெயரை நீக்க வெளிநாடு போக வேண்டிய அவசியம் இல்லை என்றார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்து கொண்ட நயன்தாரா, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த பிரபுதேவா பெயரை லேசர் சிகிச்சை மூலம் அழிக்க பாங்காக் செல்ல நயன்தாரா முடிவு செய்தார் என்றும், அப்போது விமான நிலையத்தில் அவரிடம் அதிகாரிகள் 40 நிமிடம் சோதனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது: இது எந்த ஆதாரமும் இல்லாத செய்தி. இதற்காக யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. என்னை பற்றி பத்திரிகைகளில் இப்படிதான் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன. என் கையில் குத்திக் கொண்ட பச்சையை நீக்குவதற்கு நான் ஏன் பாங்காக் செல்ல வேண்டும். அதை இந்தியாவிலேயே எங்கு வேண்டுமானாலும் எளிதாக அழித்துவிடுவேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பச்சை குத்தியதை அழித்து விட்டேனா என்பதை வந்து சோதித்து பாருங்கள். விமான நிலையத்தில் என்னை அதிகாரிகள் சோதித்தார்கள் என்பதை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார். நயன்தாரா தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். அடுத்த வாரம் முதல் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
 

Post a Comment