அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு : ரகுமான் பூரிப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பூரிப்புடன் கூறினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது. அதையேற்று கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றார் ரகுமான். பலத்த கரகோஷத்துக்கு இடையே டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.

இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்தநேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர். திரையுலகில் ரோஜா படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள். இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர். அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.


 

Post a Comment