ஆர்யா - சந்தானம் - ஹன்ஸிகா - அஞ்சலியின் சேட்டை... தொடங்கியது ஷூட்டிங்!

|

Arya Santhanam Anjali Hansika Settai
டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்குக்கு பொருத்தமான தலைப்பைக் கண்டுபிடித்துவிட்டார்கள் யுடிவி மற்றும் கண்ணன் குழு.

இந்தப் படத்துக்கு சேட்டை என்று தலைப்பிட்டுள்ளனர்.

தலைப்புக்கேற்ப, மகா சேட்டையான குழுதான் நடிக்கிறது.

ஹீரோவாக ஆர்யாவும், அவருக்கு இணையான முக்கியத்துவத்துடன் சந்தானம் மற்றும் பிரேம்ஜியும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி, ஹன்சிகா மற்றும் அஞ்சலி.

ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று காலை சத்தமின்றி தொடங்கியது. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மற்றும் அஞ்சலி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். முன்னதாக நடந்த பூஜையில் தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயன், தயாரிப்பாளர் சீனிவாசன், நடிகர்கள் ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி, நாசர், இயக்குநர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமன் இசையமைக்க, ஜான் மகேந்திரன் வசனமெழுத, பிஜி முத்தையா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரோனி ஸ்குருவாலா, சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
 

Post a Comment