அண்ணன் மரணம் அடைந்ததால் தன் பெயரை மாற்றிக்கொண்டார் பிந்து மாதவி. 'கழுகு படத்தில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. இவர் தனது பெயரை பிந்து சாகர் என்ற மாற்றிக்கொண்டார். பட வாய்ப்புகளுக்காக நியூமராலஜிபடி பெயரை மாற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார் பிந்து. இது பற்றி அவர் உருக்கமாக கூறியதாவது: பெயர் மாற்றிக்கொண்டதற்கும் நியூமராலஜிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. புதியபெயரை அதிகாரப்பூர்வமாகக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. எனது சகோதரர் மீது நான் மிகுந்த பாசம் கொண்டவள். அவர் ஐஏஎஸ் தேர்வுக்காக படிப்பில் மூழ்கி இருந்தார். இந்நிலையில் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவர் முகத்தை பார்க்க முடியாமல் வேதனைப்பட்டேன். அவரை என்கூடவே இருப்பதுபோல் உணர வேண்டும் என்பதற்காக சாகர் என்ற அவரது பெயரை என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன். எனது தோழிகள், நண்பர்களிடமும் என்னை பிந்து சாகர் என்று அழைக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் அப்படித்தான் அழைக்கிறார்கள். ஒவ்வொருமுறை அவர் பெயரை கேட்கும்போது அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதுபோல உணர்கிறேன்.
Post a Comment