அன்னையர் தினத்துக்காக 'ஆன்ட்டி' லட்சுமி ராமகிருஷ்ணன் பாட்டு!

|

Actress Lakshmi Ramakrishnan Tribute World Mothers Day
தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்த ஆன்ட்டி, இளம் அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமா, டிவி சீரியல் என்று கலக்கியவர், அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அவரோகணம் என்ற பெயரில் தான் இயக்கும் முதல் படத்துக்காக சமீபத்தில் 6 பாடல்களை பதிவு செய்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டு அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்டதாம். இந்தப் பாடலை அறிமுக பாடலாசிரியர் சுப்பு எழுதியுள்ளார்.

பாடல் இப்படி ஆரம்பிக்கிறது...

இந்த வான்வெளி விடியாதோ
எந்தன் தாய்மொழி விளங்காதோ..?

புரிஞ்சுக்கத்தான் பாத்தேன்
உன் புதிர் காலம் தீராதோ..?

நாள் போக்குல தொலஞ்சேன்
நம் எதிர்காலம் மாறாதோ..?

இயற்பியலும் அறிவேன்
உன் இயல்பே அரியேன்

இன்று மே 8, உலக அன்னையர் தினத்தன்று உலக அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணா வெளியிடப் போகும் பாடல் இதுதான்.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அம்மாவின் பாசத்தை, அவளது வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போன ஒரு மகன் பாடுவது போல அமைந்த இந்தப் பாடல் நிச்சயம் கேட்பவர்களைக் கட்டிப் போடும். எனது மூன்று பெண்குழந்தைகளும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுது என்னைக் கட்டியணைத்துக் கொள்வார்கள்...," என்றார்.
 

Post a Comment