தர்ஷன் படத்தில் மீண்டும் நிகிதா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னட நடிகர் தர்ஷன், நிகிதா மீண்டும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். இதனால் தர்ஷனின் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. கன்னட நடிகர் தர்ஷன், விஜயலட்சுமி தம்பதிக்கு இடையே கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. தன்னை தர்ஷன் கொடுமைப்படுத்துவதாகவும், இதற்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறி தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணவன், மனைவி பிரிய காரணமாக இருந்ததாக கூறி நிகிதாவை கன்னட படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதில் கோபம் அடைந்த நிகிதா 'எனக்கும் தர்ஷனுக்கும் எந்த உறவும் இல்லை. கணவன், மனைவி பிரிவதற்கு நான் காரணம் அல்ல. இனிமேல் கன்னட படத்தில் நடிக்க மாட்டேன். குறிப்பாக தர்ஷனுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றார். திரையுலகினரின் சமாதான பேச்சுக்கு பிறகு விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். நிகிதா மீதான குற்றச்சாட்டும். தடையும் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் கன்னட படங்களில் நடிக்காமல் தமிழ், தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார் நிகிதா.

இந்நிலையில் விஜய், தருண் நடிக்கும் 'சினேகிதரு என்ற கன்னட படமொன்றில் நிகிதா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் அப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு பாடல் காட்சியில் நிகிதா நடித்தார். ராம் நாராயணன் இயக்குகிறார். இதேபடத்தில் தர்ஷனும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மனைவி புகாரால் பிரிந்த தர்ஷன்,நிகிதா, ஒரே படத்தில் மீண்டும் நடிப்பது கன்னட படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்ஷனின் குடும்பத்தில் மீண்டும் பிரச்னை எழலாம் என்றும் அவரது மனைவியால் இப்படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


 

Post a Comment