பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சு என்று பேசிக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.
கலகலப்பு படத்தில் இது தலைகீழாகி, இரண்டு ஹீரோயின்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.
அஞ்சலியும், ஓவியாவும்தான் அந்த நாயகிகள்.
இந்த இருவரும் செட்டில் கூட ஒருவரையொருவர் பிரியவே இல்லையாம். எங்கும் ஒன்றாகவே இருந்தார்களாம். இருவருக்கும் ஒரே கேரவன்தானாம்.
இவ்வளவு நெருக்கமான தோழிகளாக இருவரும் திகழ்ந்ததால், யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற ஈகோ பிரச்சினை கூட எழவில்லையாம்.
அப்படியென்ன கெமிஸ்ட்ரி அது? என்று ஓவியாவிடம் கேட்டால், "நீங்கள்லாம் கேக்குற விதமே சரியில்லையே... நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை. உண்மையிலேயே அஞ்சலி எனக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார்.
எங்களுக்குள் நல்ல புரிதலும், நெருக்கமான நட்பும் உருவாகிடுச்சி. கலகலப்பு மூலம் நல்ல தோழியை சம்பாதித்துவிட்டேன். மீண்டும் நாங்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்," என்றார்.

Post a Comment