பிரகாஷ்ராஜ் படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால் ஷூட்டிங் நிறுத்தம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால் ஷூட்டிங் தொடங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிக்க உள்ள படம் 'கவுரவம்'. கவுரவ கொலைகள் பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் ஹீரோயினாக சரத்குமார் மகள் வரலட்சுமியும் ஒப்பந்தமானார்கள். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நாக சைதன்யா படத்திலிருந்து விலகினார். இதையடுத்து தெலுங்கு நடிகர் ஷிரிஷ் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஷிரிஷுக்கு வரலட்சுமி ஜோடியாக நடித்தால் பொருத்தமாக இருக்காது என ராதாமோகன் கருதினார். இதையடுத்து படத்திலிருந்து வரலட்சுமி நீக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கில் படம் தயாராவதால் இரு மொழியிலும் பிரலமான இளம் நடிகை ஒருவரை தேர்வு செய்ய பிரகாஷ்ராஜ் விரும்பினார். இதற்காக இளம் நடிகை ஒருவரிடம் அவர் கால்ஷீட் கேட்டார். ஆனால் கால்ஷீட் இல்லை எனக் கூறி அந்த நடிகை மறுத்துவிட்டார். மேலும் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. கதைக்கு பொருத்தமான ஹீரோயினை தேர்வு செய்ய முடியாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளது. இதனால் ஜனவரியில் தொடங்க வேண்டிய 'கவுரவம்' பட ஷூட்டிங், பல மாதங்களாகியும் தொடங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.




 

Post a Comment