தமன்னாவைப் போல நானும்...மணிஷா யாதவ்!

|

I Will Become Good Actress Like Tamannah Says Manisha   
வழக்கமான ரிடையர் ஆன நாயகிகளைத்தான் முன்னோடியாக வரித்துக் கொள்வார்கள் இளம் நாயகிகள். ஆனால் தற்போதும் படு ஹீட்டாக பிசியாக இருக்கும் தமன்னாவை தனது வழிகாட்டியாக கூறிக் கொண்டு ஒரு இளம் நாயகி தமிழ் சினிமாவில் தனது உலாவைத் தொடங்கியுள்ளார்.

அவரது பெயர் மணிஷா யாதவ். தமிழுக்கு வந்து ஒரு படம்தான் ஆகிறது. அதுவும் முதல் படத்திலேயே மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளார் மணிஷா. அந்தப் படம் வேறு எதுவுமில்லை, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்தான். முதல் படமே பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதால் ராசியான நடிகைகள் வரிசையில் சேர்த்து விட்டார்கள் மணிஷாவை. இப்போது அவரது கையில் பத்து விரல்கள் போக, 2 தமிழ்ப் படங்களும் இடம் பெற்றிருக்கிறதாம்.

அடுத்து சுசீந்திரன் படத்தில் நடிக்கப் போகும் மணிஷா முதலில் தமிழை தமிழ் போலவே பேசுவதற்காக ஒரு வாத்தியாரைப் போட்டு தமிழ் கற்க முடிவெடுத்துள்ளாராம்.

பெயரில் யாதவ் என்று உள்ளதைப் பார்த்து டெல்லியோ, குர்கானோ, பீகாரோ, உ.பியோ என்று நினைக்க வேண்டாம். இவர் பக்கத்து ஊரான பெங்களூரிலிருந்துதான் நடிக்க வந்துள்ளார்.

காதல் படம் பார்த்தபோதே அசந்து போய் விட்டாராம். இதனால்தான் பாலாஜி சக்திவேல் வந்து கேட்டவுடன் கால்ஷீட்டைக் கொடுத்து விட்டாராம். மேலும் தமன்னாவைத்தான் தனது வழிகாட்டியாக மானசீகமாக கருதுகிறாராம் மணிஷா. ஏன் என்றால், கல்லூரி படத்தில் தமன்னா நடித்ததைப் போல நடிக்க வேண்டும் என்று அடிக்கடி மணிஷாவிடம் பாலாஜி சக்திவேல் கூறிக் கொண்டிருப்பாராம்.

இதனால் தமன்னாவின் பால் ஒரு மரியாதை வந்து விட்டதாம் மணிஷாவுக்கு. தமன்னாவைப் போலவே நானும் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறும் மணிஷா, தமன்னாவை பின்பற்றி நானும் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிப்பேன் என்று கூறுகிறார்.

தமன்னாவிடம் உள்ள அனைத்துமே இவரிடமும் இருப்பதாகவே தெரிகிறது. எனவே நிச்சயம் தமன்னாவைப் போலவே வருவார் என்று நாமும் நம்பலாம்...
 

Post a Comment