ஆமிர்கான் பங்கேற்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி, தன்னுடைய ராக்கிகா இன்சாப் நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆமிர்கான் முதல் முறையாக டிவிக்கு வந்துள்ளார். சத்யமேவ் ஜெயதே என்ற புதிய நிகழ்ச்சியின் மூலம் இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஆமிர்கான். ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி தனது நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ராக்கி சாவந்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அப்படியே எனது ராக்கி கான் இன்சாப் நிகழ்ச்சியை காப்பி அடித்து விட்டார்கள். எனது நிகழ்ச்சியின் பார்மட்டை அப்படியே சுட்டுள்ளனர். ஆமிர்கான் பெரிய பிரபலமான நடிகர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு காலை நேரத்தை ஒதுக்கி காட்டி வருகின்றனர் என்றார் ராக்கி.
ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சி முன்பு என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காரணம், ராக்கி சாவ்ந்த் அசிங்கம் அசிங்கமாக பேசியதால். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
ராக்கி இப்படி புகார் தெரிவித்துள்ள நிலையில், பாடகர் பலஷ் சென் என்பவர் இன்னொரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது பாடல்களில் ஒன்றை சுட்டு, சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் டைட்டில் பாடலாக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இசையமைப்பாளர் ராம் சம்பத் மீதும் புகார் கொடுத்துள்ளார்.
உண்மை வெல்லட்டும்...!

Post a Comment