மல்லிகா ஷெராவத் ஆட்டம் குமட்டுகிறது: சமீரா தாக்கு

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மல்லிகா ஷெராவத் ஆடிய குத்தாட்டம் குமட்டலாக இருக்கிறது என்றார் சமீரா ரெட்டி. பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் 'தேஸ்'. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் இயக்குனருக்கு தெரியாமல் மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் குத்து பாடலுக்கு ஆட வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷன் அந்த பாடல் கதைக்கு தேவையற்றது என்றதுடன் அதை நீக்கும்படி கூறினார். ஆனால் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை. தற்போது இப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

இதுகுறித்து ஹீரோயின் சமீரா ரெட்டி கூறியதாவது: 'தேஸ்' படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீரோ எல்லோருமே பாராட்டினார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். இந்நிலையில் இப்பாடலில் ஆட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்ற தகவல் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். இந்த பாடல் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு நியாயம் செய்திருப்பேன் என்று என்னை பாராட்டி பிரியதர்ஷன் கருத்து தெரிவித்திருக்கிறார். மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது. அவரிடம் பேசியதுகூட கிடையாது. அவர் குத்து பாடலுக்கு ஆடிய நடனத்தை பார்த்த பலர் குமட்டலாக இருக்கிறது என்றனர். இப்பாடல் கைநழுவிப்போனதுபற்றி ஒரு நடிகையாக எந்த வருத்தமும் எனக்கு இல்லை. இப்படத்தில் நடித்தபோது சந்தோஷமாகவே நடித்தேன். அதற்கேற்ப பாராட்டும் கிடைத்துள்ளது. குத்து பாடல் பிரச்னைதான் மனதை பாதித்தது. எனக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டிருந்தால் மற்ற எந்த நடிகையைவிடவும் நன்றாகவே ஆடி இருப்பேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். சக நடிகை மல்லிகா ஷெராவத்தை நேரடியாக சமீரா தாக்கி பேசியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Post a Comment