'கிக்கு'.. 'செக்'கு.. ரெண்டிலுமே வெளுத்துக் கட்டும் சோபியா!

|

Sofia Vergara Is Highest Paid Tv Actress

நியூயார்க்: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்ற பெயரை 40 வயதான கொலம்பிய நடிகை சோபியா வெர்கரா பெற்றுள்ளார். ஏற்கனவே இவர் சமீபத்தில் ஆண்களால் அதிகம் விரும்பப்படும் அழகியாகவும் ஒரு கருத்துக் கணிப்பில் தேர்வானார் என்பது நினைவிருக்கலாம்.

வயது 40 என்றாலும், 25 வயது இளம் பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களும் நிரம்பிய அழகுப் பெண்தான் சோபியா. படு அழகான இவர் டிவி நடிகையும் ஆவார். சமீபத்தி்ல இவரை ஆண்களால் அதிகம் விரும்பும் பெண்ணாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்தது. இவரது கட்டழகுக்கு நாங்கள் அடிமை என்று பல ஆண்களும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது சோபியா உருவெடுத்துள்ளார். இவர் 2011 மே முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா... 19 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். போர்ப்ஸ் பத்திரிகைதான் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மாடர்ன் பேமிலி என்ற டிவி சீரியல் மூலம் வெகு பிரபலமானவர் சோபியா. இந்த டிவி ஷோ தற்போது 3வது சீசனை தொட்டுள்ளது. இதுவரை 10.2 லட்சம் ரசிகர்கள் இந்த ஷோவை ரசித்துள்ளனராம். இந்தத் தொடர்தான் சோபியாவுக்கு பெருமளவு சம்பாதித்துக் கொட்டியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் அசைக்க முடியாத டிவ நடிகையாகவும் இவர் உருவெடுத்துள்ளாராம். கிம் கர்தஷியானைக் கூட இந்த விஷயத்தில் அவர் முறியடித்து விட்டார். கிம்முக்கு அதிக சம்பளம் வாங்கியோர் பட்டியலில் 2வது இடம் கிடைத்துள்ளது. இவரது சம்பாத்தியம் 18 மில்லியன் டாலர்களாகும்.

'கிக்கு'.. 'செக்'கு.. ரெண்டிலுமே வெளுத்துக் கட்டும் சோபியா நிச்சயம் ஒரு ஆச்சரியக்குறிதான்...!

 

Post a Comment