ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது என் கையில் இல்லை என்று ஸ்ருதி ஹாசன் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கில் நான் நடித்த 'கப்பார் சிங்' பெரிய வெற்றிபெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் படங்களின் வெற்றி தோல்வி என்பது என் கையில் இல்லை. வாய்ப்பு வரும்போது எனது கேரக்டரை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றுதான் பார்க்கிறேன். கமல்ஹாசனின் மகளாக இருப்பதால்தான் சினிமா என்ட்ரி ஈசியாக நடந்ததா என்று கேட்கிறார்கள். அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், இந்த துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் திறமை வேண்டும். என் நடிப்பு திறமையை ரசிகர்கள் ஏற்க வேண்டும். அந்த வகையில் இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே அதை நிரூபித்துள்ளன. 'தபாங்' ரீமேக்தான் தெலுங்கில் எனக்கு பெரிய ஹிட் தந்துள்ளது. இதையடுத்தும் ரீமேக்கில்தான் நடிக்க இருக்கிறேன். பிரபுதேவா தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான, 'நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டனா' (தமிழில் 'உனக்கும் எனக்கும்') படம் சூப்பர் ஹிட்டானது. இதை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. இதில் த்ரிஷா நடித்த கேரக்டரில் நடிக்கிறேன்.
Post a Comment