கோட்சே வேடத்தில் பிருத்விராஜ்!

|

Prithviraj Play Godse Role

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்ற கோட்சே வேடத்தில் நடிக்கிறார் பிருத்விராஜ்.

தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தியின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. இந்தப் படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதில் கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.

பிருதிவிராஜ் வைத்து ஷாஜி கைலாஸ் தற்போது சிம்ஹாசனம் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கோட்சே படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. அவனது குடும்ப சூழல், காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள், அதன் அரசியல் பின்னணி போன்றவை படமாக்கப்படுகிறது.

இதுகுறித்து ஷாஜி கைலாஸ் கூறும்போது, "கோட்சே படம் உணர்வுபூர்வமான திரைக்கதையில் உருவாகிறது. காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும் உணர்வு போராட்டங்களும் எப்படி இருந்தன என்பதை திரைக்கு கொண்டு வருகிறோம். நல்லதற்கும் தீயதற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த கதையின் கரு," என்றார்.

கதையின் ஹீரோ பிருத்விராஜ் என்பதற்காக கோட்சேயை உத்தமன், நல்லவன், சூழ்நிலைதான் அப்படி பண்ண வச்சது.. என்றெல்லாம் காட்டித் தொலைக்கப் போறீங்கப்பா...!

 

Post a Comment