திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'என் பெயர் குமாரசாமி'. ராம், வங்காள நடிகை தேவ்தா இராவதி, ராதாரவி, பானுப்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டபோது ஹீரோயின் பணம் கொடுத்து உதவியதாக, இயக்குனர் ரதன் சந்திரசேகர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: பாசம் அளவுக்கு மீறும்போது அது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை திகிலாக சொல்லும் படம் இது. இதன் ஹீரோயின் தேவ்தா, இந்தி, வங்காளம், நேபாள மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும், கதை பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இது, என் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம். ஒரு கட்டத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. நாங்கள் திணறியபோது அதைக் கேள்விப்பட்ட தேவ்தா, சில லட்சங்களை கொடுத்து 'படத்தை முடியுங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேன்' என்றார். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் பணத்தை கேட்கவே இல்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
Post a Comment