ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?

|

Kamal S Vishwaroopam Hit Screens Au   

இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்களில் ஒன்றான கமல்ஹாஸனின் விஸ்வரூபம், ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கமல்- பூஜா குமார்-ஆன்ட்ரியா உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் விஸ்வரூபம். ஒரு ஆண்டுக்கும் மேலாக கமல்ஹாஸன் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

பிவிபி சினிமாஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி இந்த ஆண்டு ஐஃபா விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் முன்னோட்டக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன.

இந்தப் படம் இந்த மாதம் வெளியாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் பாடல்களே வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த மாற்றான், துப்பாக்கி படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே ஆகஸ்ட் மூன்றாவது வாரம் விஸ்வரூபம் படம் வெளியாகக்கூடும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

 

Post a Comment