ஜெய்ப்பூர்: பொது இடத்தில் புகைப் பிடித்த வழக்கில் நடிகர் ஷாரூக்கானுக்கு ரூ 100 அபராதம் விதித்து ஜெய்ப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 8-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்தது.
அப்போது, கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் ஸ்டேடியத்தில் புகை பிடித்ததாக கூறி, அவர் மீது ஆனந்த் சிங் என்பவர் ஜெய்ப்பூர் கூடுதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு எஸ்.சி.கோதரா, பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு ரூ.100 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த தொகையை ஷாருக்கான் தனது வக்கீல் மூலம் செலுத்துவதற்கு அவர் அனுமதி அளித்தார்.
இந்தத் தொகை, ஷாரூக்கான் வாங்கும் சிகரெட் பாக்கெட்டின் விலையைவிட குறைவுதான் என்று தீர்ப்பைக் கேட்ட பின் பலரும் கமெண்ட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment