நேக் ஸ்டூடியோ நிறுவனம் தமிழ், மலையாளத்தில் தயாரிக்கும் படம் 'ராட்சசி'. ரூபேஷ் பால் இயக்குகிறார். 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட ஒளிப்பதிவாளர் கே.பி.நம்பியாத்ரி ஒளிப்பதிவு செய்கிறார். முகமது அலி இசை. சன்னி, அனன்யா நடிக்கிறார்கள். இதில் அனன்யா ரத்தக் காட்டேரியாக நடிக்கிறார். அடர்ந்த காட்டில் இருக்கும் ரிசாட்டுக்கு சுற்றுலா செல்லும் குடும்பம் சந்திக்கும் பயங்கர அனுபவங்களே படம். நவீன தொழில்நுட்பங்களுடன் 3டி யில் தயாராகிறது. மலையாளத்தில் 'ரத்த ராட்சசு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் வெளிவருகிறது.
Post a Comment