கந்துவட்டி கொடுமை படம் துட்டு

|

Horrible film usury, money

ஸ்ரீசாய் சினி சர்க்யூட் சார்பில் கோபால்ஜி தயாரிக்கும் படம் 'துட்டு'. ஆர்யன் ராஜேஷ், சோனா சோப்ரா ஜோடி. ஒளிப்பதிவு, ராஜராஜன். இசையமைத்து முரளி கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தின் பாடல் சி.டி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது படம் குறித்து முரளி கிருஷ்ணா கூறியதாவது:

தற்போது நம் நாட்டில் அதிகம் வெளியில் தெரியாத ஒரே பிரச்னை, கந்துவட்டி. இங்குதான் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்கிறது. பணக்காரர்கள், மக்களின் பணத்தை வங்கிக் கடனாக வாங்கி திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். அதே பணக்காரர்களும், தாதாக்களும் ஏழைகளுக்கு அவசர செலவுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையையே நாசமாக்குகின்றனர். கந்துவட்டிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களும் செயல்படவில்லை. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கந்துவட்டி தொழிலிலுள்ள ரகசியங்கள், அந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் பின்னணியை நேரில் சென்று ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கந்துவட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருந்தாலும், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
 

Post a Comment