கோலிவுட்டில் அறிமுகமாகும் பாலிவுட் மாடல் அழகி

|

Bollywood model's debut in Kollywood

சென்னை: 'பார்வை ஒன்றே போதுமே, 'பேசாத கண்ணும் பேசுமே, 'பலம் ஆகிய படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கும் படம் 'துட்டுÕ. இது பற்றி அவர் கூறியதாவது: பலரது வாழ்வில் கந்துவட்டியின் கொடுமை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. ஏழ்மையை சமாளிக்க கந்து வட்டிக்கு பணம் வாங்கி அதை கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்கள் பலர். அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன், காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியன் ராஜேஷ் ஹீரோ. மும்பை மாடல் அழகி சோனா சோப்ரா ஹீரோயின். சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்குவதோடு பாடல் எழுதி இசை அமைக்கிறேன். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவிலும் ஷூட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு கோபால்ஜி. ஒளிப்பதிவு ராஜராஜன். இவ்வாறு முரளி கிருஷ்ணா கூறினார்.
 

Post a Comment