மொட்டை காட்சிக்காக நடிக்க மறுத்த நடிகைகள்

|

Shaved refused to play for the scene actresses

ஸ்ரீசிவசக்தி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஹேமந்த் குமார், நிஜாம் தயாரிக்கும் படம், 'ராஜி இவள் ஒரு புதுமைப்பெண்'. ராஜ்குமார், உமாஸ்ரீ, குமரிமுத்து அண்ணன் மகன் ராகவன், சபீதா ஆனந்த், அப்பு, கன்னட வில்லன் ஜேசுதாஸ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, குமரன்.ஜி. இசை, எம்.பீட்டர் ஜோசப். பாடல்கள், தர்மபுரி சோமு. கிருஷ்ணகிரி அசோக்.ஜி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: அம்மாவோ, அப்பாவோ இறந்துவிட்டால், ஆண்கள்தான் கொள்ளிபோடுவார்கள்.

ஆனால், தன் தாய்  இறந்தபின், ஊராரின் எதிர்ப்பை மீறி சுடுகாட்டுக்கு செல்லும் ஹீரோயின், இறுதிச்சடங்கு செய்து அம்மாவுக்கு கொள்ளிபோடுகிறார். இந்தக் காட்சியில் நடிக்க மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னதற்காக நிறைய ஹீரோயின்கள் நடிக்க மறுத்தனர். பிறகு 'லொள்ளு தாதா பராக் பராக்' உமாஸ்ரீயிடம் கேட்டபோது சம்மதித்தார்.
 

Post a Comment