சென்னை: நடிகை சோனாவிடம் பிரபல வாரஇதழ் ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்த நடிகை சோனா ஆண்கள் எனக்கு டிஸ்யூ பேப்பர் மாதிரி என்று கூறியிருந்தார். இதனால் கொதித்து எழுந்த ஆண்கள் சோனாவின் வீடு முன்பு முற்றுகையிட்டு கைதானார்கள். இந்த நிலையில் சோனா தன்னுடைய பேட்டியில் ஆண்களைப் பற்றி அப்படி கூறவே இல்லை என்றும் அந்த வார இதழ்தான் அப்படி எழுதிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
பேட்டியின் போது தான் கூறிய சில வார்த்தைகள் தவறான பொருள்படும்படி வெளியாகி உள்ளதாகவும், இதனால் தனக்கு தேவையற்ற சங்கடங்கள் எழுந்ததோடு தன் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியருக்கு சோனா கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வார இதழ் ஆசிரியர், குறிப்பிட்ட பேட்டியில் இடம்பெற்ற கருத்தில் பிழை ஏற்பட்டிருப்பதாக சோனா கருதும் நிலையில் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
Post a Comment