நடன இயக்குநர் ஷோபிக்கு நாளை கல்யாணம்…. காதலியை மணக்கிறார்

|

Dance Master Shobi Wed Lover Tomorrow

பிரபல தமிழ் திரைப்பட நடன நடன இயக்குனர் ஷோபியின் திருமணம் நாளை சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர் ஷோபி. தமிழ் திரை உலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கிப் படத்தில் இடம் பெற்ற கூகுள் கூகுள் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இவரது திருமணம் நாளை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெறுகிறது. மாலையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இது காதல் திருமணம்.

ஷோபி கரம் பிடிக்கும் காதலியும் ஒரு டான்ஸர்தானாம். நீண்டநாள் காதலித்து வந்தவரையே கரம் பிடிக்கிறார் ஷோபி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபி கமல்ஹாசனின் கரம் பட்டு சினிமாவுக்குள் டான்ஸ் மாஸ்டராக நுழைந்தவர் ஆவர். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில்தான் இவர் முதன் முறையாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். தொடர்ந்து மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களிலும் நடனம் அமைத்துள்ளார். விருமாண்டி படத்திலும் டான்ஸ் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை மறைந்த பால்ராஜ் ஒரு பழம்பெரும் டான்ஸ் மாஸ்டர்.

 

Post a Comment