கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் - இது கமல் ரசிகர்கள்

|

Kamal Fans Decide Return Ration Cards

மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர்.

கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார்.

தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்.

அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்," என்றனர்.

 

Post a Comment