சின்னத்திரையில் ஜாக்பாட் தொகுத்து வழங்கும் சிம்ரனுக்கு அலுத்துப் போய்விட்டதாம். இனி சீரியல், நிகழ்ச்சிகளை தயாரிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாராம்.
சினிமா படம் எடுக்கலாம் என்று யோசித்து வந்த சிம்ரன் அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கணவர் கூறியதன் விளைவாக சின்னத்திரையிலேயே கால் ஊன்றலாம் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளாராம்.
சினிமாவில் மார்க்கெட் போன நடிகைகளுக்கு சின்னத்திரைதான் சேஃப்டி. சீரியலோ, நிகழ்ச்சித் தொகுப்போ கை மேல் காசு பார்க்கலாம். குடும்பத்தையும் பாதிப்பில்லாமல் கவனிக்கலாம்.
குட்டி பத்மினி தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரை சினிமாவில் இருந்து சீரியல் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் களம் இறங்கியுள்ளார் சிம்ரன்.
சிம்ரனுக்கு இதில் காட்மதராக இருப்பவர் வேறு யாருமல்ல ராடான் டிவி புகழ் ராதிகாவேதான். அவரைப் போல சின்னத்திரையில் ஜெயிக்கவேண்டும் என்பது சிம்ரனின் ஆசையாம்.
Post a Comment