முதல் படத்திலேயே விருது கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி!- 'பரதேசி' பூர்ணிமா

|

Poornima Elated With Her First Natinal Award

சென்னை: பணியாற்றிய முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார் பரதேசி படத்தின் உடை வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி.

32 வயதாகும் பூர்ணிமாவுக்கு சொந்த ஊர் சென்னைதான். இவர் பணியாற்றிய முதல் படம் பாலாவின் பரதேசிதான்.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு உடை என்பதே கோணிப்பைதைன். ஒரு சில பெண்களுக்கு மட்டும் அந்தக் காலத்து சீட்டி சீலை என வித்தியாசமான ஆடை வடிவமைப்பு.

வெள்ளைக்காரர்கள், கங்காணி மற்றும் அந்த டாக்டர் கேரக்டர்களுக்கு மட்டும் அந்தக் கால கோட்டு சூட்டு.

விருது பெற்றது குறித்து பூர்ணிமா கூறுகையில், "`பரதேசி' எனக்கு முதல் படம். எடுத்த எடுப்பிலேயே சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்தது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்க வில்லை. பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்துதான் இந்த ஆடையை வடிவமைத்தோம். இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன்," என்றார்.

 

Post a Comment