சென்னை: நடிகர் சசிகுமார் தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதனால் தமிழ்த் திரையுலகமே ஆச்சரியமாகியுள்ளது.
சசிக்குமாரின் முகவெட்டும், பேஷும் பாஷையும், நடிப்பும் அவருக்கென குடும்பப் பாங்கான ரசிகர்களை சேர்த்து விட்டுள்ளது.
இவர் நடித்து இயக்கிய முதல் படம் ‘சுப்ரமணியபுரம்'. அது ஹிட்டானதால் ‘நாடோடிகள்' படத்தில் நாயகனாக நடித்தார். அப்படமும் வெற்றிகரமாக ஓடிவசூல் குவித்தது.
தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க' படத்தை தயாரித்தார். அதுவும் ஹிட்டானது. விருதுகளும் கிடைத்தது.
பின்னர் ‘போராளி', ‘சுந்தரபாண்டியன்' படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘சுந்தரபாண்டியன்' மெகா ஹிட்டானது. இப்பொழுது குட்டிப்புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இடையில் போராளி போன்ற சுமார் படங்கள் வந்தாலும் கூட, அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருவதால் சசிகுமார் மார்க்கெட் எகிறியவண்ணம்தான் உள்ளது. எனவே, இப்பொழுது புதுப்படங்களில் நடிக்க அவர் ரூ.4 கோடி கேட்கிறாராம்.
இதைக் கேள்விப்புட்டு கோலிவுட்டில் வாய் பிளந்து நிற்கின்றனராம். ஆனாலும் சசி கேட்பதைக் கொடுப்பார்கள் போலத்தான் தெரிகிறது.
Post a Comment