சென்னை: சென்னையில் ஆங்காங்கே பரதேசி படத்தில் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாலா இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாலா இயக்கிய பரதேசி படம், கடந்த 15ம் தேதி வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால், படம் வெளியான சில நாள்களிலேயே, அதன் திருட்டி விசிடிக்கள் கடைகளுக்கு வந்துவிட்டன. இதனால், பரதேசி படம் வியாபார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறிய பாலா, இந்த விவகாரத்தில் போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து பரதேசி திரைப்படத்தை காப்பாற்ற வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment