"சாட்டை" இயக்குநர் அன்பழகனுக்குத் திருமணம்... !

சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் திருமணம் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தமிழக அரசு பள்ளிகளின் நிலைமையை மிக யதார்த்தமாய் எடுத்துக்காட்டிய படம் சாட்டை.

ஷலோம் நிறுவனம் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் தயாரிப்பில் இயக்குநர் நடிகர் சமுத்திரகனி நடித்து வெற்றியடைந்த படம் சாட்டை. இப்படத்தை இயக்குநர் அன்பழகன் இயக்கியிருந்தார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவை ஆழமாக எடுத்துச்சொன்ன இந்த படம் அன்பழகனுக்கு சிறந்த இயக்குநர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தது.

அடுத்தகட்ட படங்களில் ஆர்வமாக இருக்கும் இயக்குநர் அன்பழகனுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகள் பெயர் எம்.மாலா. எம்.எஸ்.சி.,பிஎட்., படித்தவர். இன்று இவர்கள் திருமணம், பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்தில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ் எனும் பெயரில் அடுத்த படம் இயக்குகிறார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்ஏசி கூறுகையில், "விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி, இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது.

3 சிறிய கதைத் தொடர்களை ஒருங்கிணைத்து, இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன். இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தில் 70 வயது முதியவராக பாத்திரமேற்று நான் நடித்துள்ளேன். எனக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக, இனிமேல் திரைப்படங்களை இயக்க வேண்டாம் என்று என்னுடைய மகன் விஜய் அன்புக் கட்டளையிட்டுள்ளார். ஆனால், உழைப்புக்கு ஏது ஓய்வு என்பது எனது கருத்து.

கத்திக்கு சிக்கல் இல்லை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கத்தி' திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர்," என்றார்.

 

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை... - எண்பதுகளில் சினிமா இசையை அனுபவித்த எவருடைய காதுகளிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் நிரந்தரமாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தத் தலைமுறையினரும் முதல் முறை கேட்டதுமே ரசித்து பரவசப்படும் இனிமையான இந்தப் பாடலை, மகேந்திரன் இயக்கத் திட்டமிட்டிருந்த மருதாணி படத்துக்காகப் போட்டிருந்தார் ராஜா.

ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. எனவே அந்தப் பாடலை அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவுக்குக் கொடுத்தார் இளையராஜா.

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

ஆனால் படத்தின் இசைத் தட்டில் இடம்பெற்ற புத்தம் புதுக்காலை, படத்தில் இடம்பெறவில்லை.

பாடல் வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடலை நேற்று வெளியான மேகா படத்தில் இடம்பெறச் செய்துள்ளார் இளையராஜா. இந்தப் படத்துக்கு இசையும் அவரே.

ஒரிஜினல் பாடலுக்கும், ராஜா புதிதாக இசையமைத்துக் கொடுத்துள்ள இந்தப் பாடலுக்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதற்கான காரணத்தை படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பாடல் குறித்து இளையராஜா கூறுகையில், "அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக இந்தப் பாடலை நான் கொடுத்தபோது, அதை படமாக்கிய பாரதிராஜா, நீளம் கருதி பின்னர் நீக்கிவிட்டார். மேகா படத்தில் பொருத்தமான ஒரு சூழலில் இதைப் பயன்படுத்த விரும்பினார்கள். அதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்துள்ளேன்," என்றார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் புத்தம் புதுக் காலை பாடலுக்கு அத்தனை வரவேற்பு.

மேகா படம் நேற்று வெளியானது. படத்தை டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஸ்வின்- சிருஷ்டி நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார்.

 

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

சென்னை: மலையாளத்திலும், தமிழிலும் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார்.

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற வெற்றிப் படத்தினை விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்கியவர் பாலாஜி தரணிதரன்.

"என்னாச்சு?" என்ற வசனம் பிரபலமாவதற்கு காரணமே இப்படம்தான்.

ஒரு பக்க கதை:

இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் புதிய படத்திற்கு "ஒரு பக்க கதை" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை நாளை மறுநாள் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

ஜெயராம் மகன் காளிதாஸ்:

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி இன்னும் தேர்வாகவில்லை.

ஒளிப்பதிவாளர்கள்:

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் ஒளிப்பதிவாளர்களான சி.பிரேம்குமார் மற்றும் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் இப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.

தயாரிப்பு, இசையும்:

இப்படத்திற்கு கோவிந்த மேனன் என்பவர் இசையமைக்கிறார். வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை பாவனா.

தமிழில் வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. தெலுங்கிலும் நடித்துள்ளார். பின்னர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

ஆனால் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளார் பாவனா. இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வருடம் ஜனவரியில் எனது சகோதரருக்குத்தான் திருமணம் நடைபெற இருக்கிறது. எனக்கு இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்," என்றார்..

சமீபத்தில், கன்னட பட இயக்குநர் ஒருவர் புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய நடிகை பாவனாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். அடுத்த இரு தினங்கள் கழித்து, 'உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சாமே... அப்ப நடிக்க மாட்டீங்கதானே," என்று கேட்டுள்ளார்.

என்னடா இது.. பொழப்பைக் கெடுத்துடுவாங்க போலிருக்கே.. என்று அலறியடித்துக் கொண்டு இந்த மறுப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் பாவனா.

 

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி.

ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன.

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான்.

பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா.

இந்த முத்தச் சம்பவம் எங்கே எப்போது நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. ஆனால் 'இந்த வகை முத்தங்கள் காமத்தில் சேர்த்தியில்லை' எனும் விளக்கம் நிச்சயம் தயாராக இருக்கும்!

 

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

மும்பை: கோச்சடையான் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தை தங்களின் தலைமைக் குழுவில் இணைத்துக் கொண்டது இந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா.

கிரியேட்டிவ்-செயல்திட்ட இயக்குனர் மற்றும் தென்னிந்தியாவின் ஈராஸ்நவ் உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளின் தலைவர் என இரு பெரிய பொறுப்புகளில் சவுந்தர்யாவை நியமித்திருப்பதாக ஈராஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த இரட்டைப் பொறுப்பின் மூலம், ஈராஸ்நவ் உள்பட அனைத்து புதிய ஊடக தளங்களுக்கும் தலைவராகிறார் சவுந்தர்யா. இந்நிறுவனத்தின் படங்களுக்கு தனது படைப்புத் திறனை வழங்க உள்ளார்.

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கு சவுந்தர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராஸ்நவ், மொபைல், டிடிஎச், ஐபிடிவி மற்றும் பிராண்பேண்ட் உள்ளிட்ட டிஜிட்டல் துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிப்பதாகக் கூறிய அவர், டிஜிட்டல் களத்தில் சவுந்தர்யாவின் அனுபவம், நிறுவனத்தின் செயல்திட்டங்களை வழிநடத்தும் அளவுக்கு அவரை சிறந்த தலைவராக உருவாக்கும் என்றார்.

ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சவுந்தர்யா கூறினார்.

ஈராஸ் நிறுவனத்தின் புதிய பொறுப்புகளில் சவுந்தர்யா கவனம் செலுத்தினாலும், தனக்கு விருப்பமான தொழிலான திரைப்பட இயக்குனர் பணியையும் தொடருவார்.

அடுத்து ஈராஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இயக்கிய ‘கோச்சடையான்' படத்தின் தயாரிப்பாளர்கள் ஈராஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

பெங்களூர்: நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

 

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் கவுதம்மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர். இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது.

108 நம்பருக்கு பேசி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டு பிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

மும்பை: விநாயக பெருமான் குறித்து ராம் கோபால் வர்மா டிவிட்டரில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா நேற்று தனது டிவிட்டரில் ஒரு கீச்சு வெளியிட்டார். அதில் விநாயகர் சதுர்த்தி குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தன. சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட விநாயகரின் தலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்கோபால் வர்மா, விநாயகரின் வயிறு பெரிதாக இருப்பதற்கு, யானை தலையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதுதான் காரணமாக இருக்குமோ? அல்லது, சிறு வயதில் இருந்தே விநாயகருக்கு பெரிய வயிறுதானா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த தினத்தை குறிப்பதா, அல்லது யானையின் தலையை பொருத்திய தினத்தை குறிப்பதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

புராணங்கள் தெரிந்த பண்டிதர்கள் இந்த கேள்விக்கான விடையை தெரிவித்திருந்தால் பிரச்சினையாகியிருக்காது. ஆனால் வட இந்திய அரசியல்வாதிகள் இதை சர்ச்சையாக்கிவிட்டனர். ராம்கோபால் வர்மா உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவசேனாவின், பிரேம் சுக்லா கூறுகையில், விநாயகர் சதுர்த்தி என்பது, மகாராஷ்டிர மாநிலத்தாரின் கலாசாரத்தில் ஊறியது. விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ராம்கோபால் வர்மா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருப்பது மராட்டியர்களை அவமரியாதை செய்வதை போலவாகும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான சஞ்சய் நிருபம் கூறுகையில், ராம்கோபால் வர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார். பாஜகவின் என்.சி.சாய்னாவும் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளில் இருந்தும் கண்டனம் வெளியானதை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா தனது டிவிட்டுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல்! - கவிஞர் கபிலனின் பாட்டனுபவம்!

ஏ.ஆர்.ரஹ்மான் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதியுள்ளார்.

அந்த அனுபவத்தைப் அவரே சொல்கிறார்....

ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல்! - கவிஞர் கபிலனின் பாட்டனுபவம்!

ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம் பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிறகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்படவிருக்கிறது என்பதை அந்தந்த லொக்கேஷன்களை இன்டர்நெட்டில் காட்டி விளக்குவார். குறிப்பிட்ட அந்த பாடல் காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் எந்த விதமான உடைகள் அணிவார்கள் என்பதை கூட அந்த உடைகளின் புகைப்படங்களை காட்டி பிரமிக்க வைப்பார்.

பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூனை ஒலிக்க செய்வார். இப்படியெல்லாம் அந்த பாடல் எழுதுவதற்கான உற்சாகமான மன நிலையை எனக்குள் உருவாக்கிவிடுவார்.

அதற்கப்புறம் அந்த பாடல் வரிகளில் எவையெல்லாம் வர வேண்டும் என்பதையும் சுருக்கமாகக் கூறிவிடுவார். அதற்கப்புறம் நமது கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டியதுதான்.

ஒரு பாடலை எழுதுவதற்காக நாங்கள் கொடைக்கானலுக்கு கிளம்பினோம். அந்த பாடலை மிக உயர்ந்த இடத்தில் வைத்துதான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். விமானத்தில் மதுரை செல்வதற்குள்ளாகவே விறுவிறுவென பாடலை எழுத ஆரம்பித்துவிட்டோம். இறங்குவதற்குள் சில பல்லவிகள் தயாராகிவிட்டது. பின்பு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்று மலை உச்சியில் தங்கினோம். ‘உயர்வான பாடல் இது. உச்சியில் அமர்ந்துதான் எழுத வேண்டும்' என்று ஷங்கர் சார் சிரித்துக் கொண்டே கூறினார்.

அந்த பாடல் வரிகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்பு பிரமாதமான பாடலாக உருமாறி வந்தது. இந்த பாடல்களை எழுதி முடிக்கும் வரை நான் இரவில் எந்த நேரமும் தயாராக விழித்துக் கொண்டிருப்பேன். திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் போன் செய்வார். சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு மாற்றச் சொல்வார். ஐ படத்திற்காக நான் எழுதிய இன்னொரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இவ்வாறு பாடலாசிரியர் கபிலன் கூறினார்.

தற்போது சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதி வருகிறார் கபிலன்.

 

ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை மிக ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் படமாக்குகின்றனர். இதற்காக மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறது படக்குழு.

தல 55 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக சென்னையில் நடந்தது.

ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

ஆபத்தான பகுதி

இப்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்தோ-திபெத் எல்லையில் படமாக்கவுள்ளார்கள். இந்தோ-திபெத் எல்லை மிகவும் அபாயகராமான ஒரு பகுதியாகும். இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டும்.

காத்திருப்பு

தற்போது, மத்திய அரசின் ஒப்புதலுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். அவர்கள் ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசாரின் உதவியுடன் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.

முறுக்கு மீசை

போலீஸ் கதையான இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். அஜீத் இப்படத்தில் மிகவும் இளமையான தோற்றத்துடன், முறுக்கு மீசை, நரையில்லா தலையுடன் நடிக்கிறார்.

இப்படத்தின் புகைப் படங்கள் ஏற்கெனவே வெளியாகிருந்த நிலையில், அஜீத்-த்ரிஷா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகின. இணையதளத்தில் இந்தப் படங்களுக்கு ஏக வரவேற்பு. கொண்டாடிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

 

நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

தனுஷின் சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

தனுஷ் சமீபத்தில் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி' படம் பலத்த வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் புதுப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

இந்தப் படத்துக்கு நானும் ரவுடிதான் என தலைப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா - விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘போடா போடி' படத்தை எடுத்த விக்னேஷ் இயக்குகிறார்.

நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசையாகும்.

முன்பு ஒரு விழாவில், நயன்தாராவைக் கடத்த வேண்டும் என ஆசை இருக்கிறது என்று கூறி அதிரவைத்தார் விஜய் சேதுபதி. அதை முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கேட்டார் நயன்தாரா.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டதும், சந்தோஷமாக ஒப்புக் கொண்டாராம்.

 

உறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்!

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 -களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்.

அன்றைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலை நடிகராகத் திகழ்ந்தார். இந்த இருவரும் நடிக்க இயலாத படங்கள், வேடங்களில் கூட கார்த்திக் அட்டகாசமாக நடித்தார்.

இயக்குநர் ஷங்கர் தன் ஜென்டில்மேன் படக்கதையை கார்த்திக்கை மனதில் வைத்து எழுதியதாகச் சொல்வார். அதேபோல, கார்த்திக்குக்காக எழுதப்பட்ட கதைதான் இந்தியன்.

உறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்!

இப்படி கொடிகட்டிப் பறந்த கார்த்திக், திடீரென்று காணாமல் போனது காலத்தின் கோலமல்ல, அவரது தனிப்பட்ட குணாதிசயம். லட்ச லட்சமாக சம்பாதித்தாலும் அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல், உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, ஜாலியாக வாழ்ந்தவர் கார்த்திக்.

அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், தனது வருவாய் முழுவதையும் அம்மா, அண்ணன், சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கே வாரி வழங்கியதாகச் சொல்வார்கள் அவருடனிருந்தவர்கள். சக நடிகர்களுக்கும் நிறைய கொடுத்து உதவியிருக்கிறார், அது திரும்ப வருமா வராதா என்று யோசிக்காமலே.

ஆனால் நேரத்தை மதிக்காதது, தொழிலில் கவனமின்மை ஆகிய இரண்டு விஷயங்கள் அவரைக் கவிழ்த்தன (அவரது அரசியல் காமெடி தனிக்கதை).

முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, கார்த்திக் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளும் உள்ளன.

முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. நான் ஏன் வெளியேற வேண்டும் என்று கார்த்திக் வெளியேற மறுத்த போதுதான், உயிலை அவரிடம் காட்டினார்களாம்.

சொத்து உயில் அவர் பெயரில் இல்லை. அண்ணன் பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும்தான் இருந்ததாம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டை போட்டார். தன் பணத்தில் வாங்கிய சொத்துகளை தனக்கே தெரியாமல் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டதைச் சொல்லி குமுறினார். ஆனால் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என்றும் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசி வருகிறார் கார்த்திக். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்.

கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இப்போது முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக உள்ளார். மகன் விவகாரங்களை கார்த்திக்தான் கவனித்து வருகிறார்.

 

சமந்தாவை அடுத்து தமன்னாவுக்கும், மகேஷ் பாபுவுக்கும் இடையே லடாயா?

ஹைதராபாத்: மகேஷ் பாபுவுக்கும், தமன்னாவுக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தமன்னாவும், மகேஷ் பாபுவும் சேர்ந்து தற்போது ஆகடு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்கள். சீனு வைட்லா இயக்கி வரும் இந்த படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளது.

சமந்தாவை அடுத்து தமன்னாவுக்கும், மகேஷ் பாபுவுக்கும் இடையே லடாயா?

இந்நிலையில் படப்பிடிப்பில் மகேஷ் பாபுவும், தமன்னாவும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வது இல்லையாம். ஏன் நல்லா பேசிப் பழகும் இருவரும் இப்படி பேசாமல் உள்ளனர் என்று படக்குழுவினர் வியக்கிறார்களாம்.

அதே சமயம் சுவிட்சர்லாந்து சென்று இருந்த இடத்தில் தமன்னா மகேஷ் பாபுவின் மனைவியோடு ஜாலியாக பேசியுள்ளார். அவருடன் சேர்ந்து ஷாப்பிங் கூட சென்றுள்ளார்.

முன்னதாக சமந்தா, மகேஷ் பாபு இடையே பிரச்சனை இருந்தது. ஆனால் விருது விழாவில் பார்த்து பேசி ராசியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் மூடர் கூடம், புதுயுகத்தில் பார்த்தீபன் 'டே-அவுட்'

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் நாளை சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

விஜய் டிவியில் சிறப்பு திரைப்படங்களாக காலை 10 மணிக்கு 'வில்லா', பகல் 12 மணிக்கு 'மூடர் கூடம்', மாலை 4 மணிக்கு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', இரவு 7 மணிக்கு சிறுத்தை, இரவு 11 மணிக்கு 'சைனீஸ் சோடியாக்' ஆகிய திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.

விநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் மூடர் கூடம், புதுயுகத்தில் பார்த்தீபன் 'டே-அவுட்'

புதுயுகம் டிவியில் காலை 11 மணிக்கு, 'ஸ்டாரின் டே அவுட்' என்ற வித்தியாசமான நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது. இயக்குநர் பார்த்தீபன் ஒவ்வொரு திரையரங்காக சென்று கதை, திரைக்கதை வசனம், இயக்கம் திரைப்படம் குறித்த விமர்சனத்தை ரசிகர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளப்போகிறார்.

பகல் 12 மணிக்கு, 'செலப்ரிட்டி கிச்சன்' ஸ்பெஷல் நிகழ்ச்சியில், நடிகை சுலோக்ஷனா பங்கேற்கிறார்.

மாலை 5 மணிக்கு, 'கோலிவுட் அன்கட்' நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சீயர்ஸ் வித் சூப் பாய்ஸ் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஜோடி புதுசு நிகழ்ச்சியும் காண்பிக்கப்படுகிறது.

இரவு 8 மணிக்கு 'ஆர் யூ அப்பாடக்கர்' சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா ஸ்டார்கள் பங்கேற்கிறார்கள். இரவு 9 மணிக்கு லிங்குசாமியுடன், மதன் சந்திப்பு நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது.

 

ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான 'ஐ' படத்தை வாங்கிய ஜெயா டிவி

சென்னை: விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்காக விக்ரம் இரண்டு ஆண்டுகளாக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கடினமாக உழைத்துள்ளார்.

ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான 'ஐ' படத்தை வாங்கிய ஜெயா டிவி

ஐ படத்தை சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் ஆர்னால்டு, ஜாக்கி சான் ஆகியோர் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த வல்லினம் மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களையும் ஜெயா டிவி தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

3 நடிகைகளுக்குள் சண்டை மூட்டிவிடும் இளம் ஹீரோ

சென்னை: பெயரில் வெனயத்தை வைத்திருக்கும் நடிகர் தற்போது தான் நடித்து வரும் படத்தில் தன்னுடன் நடிக்கும் 3 நடிகைகளுக்குள் சண்டை மூட்டி விடுகிறாராம்.

பெயரிலேயே வெனயத்தை வைத்துள்ள அந்த நடிகர் தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் பெயரில் மதுவை வைத்துள்ள நடிகை அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது நடிகர் அந்த நடிகையுடன் ஜோடி போட்டு ஜாலியாக சுற்றியுள்ளார். அவர்கள் ஜாலியாக சுற்றியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர் தான் கன்னத்தில் கையை வைத்து ஓரமாக உட்கார்ந்தாராம்.

இந்நிலையில் நடிகர் நடித்து வரும் மற்றொரு படத்தில் 3 நாயகிகள். நடிகர் 3 நாயகிகளுடன் ஜாலியாக கடலை போட்டு சுற்றுகிறாரா என்று கேட்கிறீர்களா. கடலை ஒரு பக்கம் இருந்தாலும் நடிகைகளுக்குள் போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விடுகிறாராம்.

என்னய்யா ஹீரோ இவர் இப்படி நடிகைகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாரே என்று தலையில் அடித்துக் கொள்கிறதாம் படக்குழு.

 

நாய்களை அடிப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: நடிகை அறிவிப்பு

மும்பை: நாய்களை அடிப்பவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒரு விலங்கு பிரியர். அவர் வீ்ட்டில் 2 தெரு நாய்கள் உள்பட 4 நாய்கள் உள்ளன. அதில் ஒரு நாய் அண்மையில் தான் இறந்து போனது. இந்நிலையில் அவரது மேக்கப் மேன் யாரோ ஒருவர் நாயை அடித்து துன்புறுத்தும் வீடியோவை அவரிடம் காண்பித்துள்ளார்.

நாய்களை அடிப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: நடிகை அறிவிப்பு

அதை பார்த்து கோபம் அடைந்த இஷா நாயை அடித்த அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்று கொந்தளித்தார். இந்நிலையில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, யாராவது நாயை அடித்து துன்புறுத்துவதை பார்த்தால் அதை வீடியோ எடுத்து அந்த நபரை அடையாளம் காட்டுபவர்களுக்கு தான் ரூ.1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இஷாவின் இந்த அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

நடிகையின் பிடியில் 'ஒரு இயக்குநர் இரண்டு ஹீரோக்கள்'!

தான் ஒரு பச்சைத் தமிழச்சி என தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஹீரோயின் அவர். முகத்திலும் தோள்களிலும் முதிர்ச்சி எட்டிப் பார்த்தாலும் கோலிவுட்டைப் பொறுத்தவரை அவர் ப்ரியமான இளம் 'ஹீரோயினி'தான்.

ஆரம்பத்தில் இவரது படங்கள் ஒன்று கூட எடுபடவில்லை. இந்தப் பொண்ணு நடிச்சா அவ்ளோதாம்பா என்று திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள் தயாரிப்பாளர்கள். நடிகர்களின் ஆதரவும் இல்லாத நிலையில், முன்னாள் நடிகை ஒருவரின் மறுபிரவேசப் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

எப்படியோ எதிர்நீச்சல் போட்டு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.

இப்போது கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால் பழையபடி ராசியில்லாத பட்டம் தேடி வந்துவிடுமோ என்ற பயம்.

பார்த்தார்.. உடனே நினைவுக்கு வந்தது கலைக்குடும்ப நடிகரின் டெக்னிக்தான். பார்ட்டி, டிஸ்கஷன் என்ற பெயரில் உடன் நடித்த ஹீரோக்களை வளைக்க ஆரம்பித்துவிட்டாராம். அவரது அன்புப் பிடியில் இப்போது சிக்கியிருப்பவர்கள் மறைந்த காலேஜ் ஹீரோவின் மகனும், காதல் ஹீரோவின் மகனும்தான். இந்த இருவரும் இப்போது பெரும்பாலான நேரத்தைக் கழிப்பதே ஹீரோயினுடன்தானாம்.

உடன் நடித்த ஹீரோக்கள் விழுவதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால் அவரை வைத்து இயக்கிய டைரக்டரையும் கப்பென்று பிடித்துக் கொண்டார் நடிகை.

ஆரம்பத்தில் அந்தப் படத்தில் இவரல்ல நாயகி. இத்தனைக்கும் அவரைப் பார்த்து ரொம்ப மெச்சூர்டா இருக்காளே.. என்று சொன்ன டைரக்டருக்கு என்ன நடந்ததோ... ப்ரிய நாயகியே இருக்கட்டும் என ஆனந்தமாக ஒப்பந்தம் செய்தார்.

இதன் விளைவு, திட்டமிட்ட பட்ஜெட்டை விட ஒன்றரை கோடி அதிகமாக விழுங்கியிருக்கிறது அந்தப் படம். நாயகியின் அன்பில் அளவுக்கு மீறி நனைந்துவிட்டதால், சோலோ பாடல் வைத்திருக்கிறார் டைரக்டர். நாயகி யாரை நோக்கி கை நீட்டினாரோ, அவர்தான் மேக்கப் மேன்.. யாரை சிபாரிசு செய்தாரோ அவரே நடன இயக்குநர்...

இந்த ரேஞ்சில் போனால் நடிகையின் கொடி பறக்கும்.. ஆனால் சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் நடிகர்களின் கதி?

கவலையோடு பார்க்கிறது சம்பந்தப்பட்டவர்களின் நட்பு வட்டம்!

 

அஸ்ஸாம் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் ரூ80 லட்சம்!! மணிப்பூரில் ரூ8 லட்சம்!!

குவஹாத்தி/இம்பால்: நூறு கோடி ரூபாயைத் தாண்டி பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இந்தியாவின் பாலிவுட்டும் கோலிவுட்டும் தயாரிக்க ரூ1 கோடியை கூட எட்டாமலே அஸ்ஸாமிய சினிமாவும் ரூ10 லட்சத்தைத் தொடாமலே மணிப்பூர் சினிமாவும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் அதாவது அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், மேகாலயா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள்தான் சினிமாவின் தாக்கத்தை எதிர்கொள்ளாதவகைகளாக இருக்கின்றன.

அஸ்ஸாம் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் ரூ80 லட்சம்!! மணிப்பூரில் ரூ8 லட்சம்!!

அஸ்ஸாம்- மணிப்பூர் சினிமா

ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அஸ்ஸாமிய சினிமாவும் மணிப்பூரி சினிமாவும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் நம்ம தமிழ் சினிமாவைப் போல நூற்றுக் கணக்கில் வெளியாகி நூற்றுக்கணக்கில் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் கதையெல்லாம் இங்கு இல்லை.

ஆண்டுக்கு 20 படம்

அஸ்ஸாமிய சினிமா உலகம் என்பது ஆண்டுக்கு அதிகபட்சம் 20 படங்களை வெளியிடுகிறது.

அதிக பட்ஜெட் ரூ80 லட்சம்

அஸ்ஸாமிய சினிம உலகத்தின் மிக அதிகமான பட்ஜெட் என்பது ரூ70 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை. இது பாலிவுட் படத்தில் கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கான செலவை விட குறைவுதான்.

70 படங்கள்

அதே நேரத்தில் மணிப்பூர் சினிமாவோ ஆண்டுக்கு 60 முதல் 70 படங்களை வெளியிடுகிறது.

ரூ7 முதல் ரூ8 லட்சம்

ஆனால் மணிப்பூர் சினிமாவின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ரூ7 லட்சம் முதல் ரூ8 லட்சம்தான் வரை.

லாபம் இல்லையே

இப்படி சிக்கனத்தில் படமெடுத்தாலும் சினிமா வர்த்தகம் என்பது செழிப்புக்குரியதாக இல்லை என்பது அந்த மண்ணின் திரை உலகக் கலைஞர்களின் கவலை. அங்கெல்லாம் நம்ம ஊர்களைப் போல பிரம்மாண்ட திரையரங்குகள் இல்லை என்பதுதான் முதன்மை பிரச்சனை. அந்த பிராந்திய முழுவதுமே மொத்தமே 70 திரையரங்குகளே அதிகம்.

இப்படித்தான் திரையிடல்

பொதுவாக சமூகநலக் கூடங்களை படத்தை திரையிட பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் கிராமங்களுக்கு போய் படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கிற நிலையும் இருக்கிறது.

மகா கலைஞர்கள்

ஆனாலும் அவ்வப்போது தேசிய விருதுகளை தட்டிவிட்டுச் செல்கிற மகா கலைஞர்களும் அம்மண்ணில் இருக்கிறார்கள். அவர்களது கவலையெல்லாம் சினிமாவிற்கான பயிற்சி நிறுவனங்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகம் கொண்டுவரப்பட வேண்டும்; சினிமாக்களை திரையிடுவதற்கான அரங்குகள்; சினிமாவுக்கான நிதி உதவிகள் தேவை என்பதாக இருக்கிறது.

கண்டுகொள்ளுமா அரசு

அவர்களும் பாலிவுட் போல, கோலிவுட் போல அல்லாது போனாலும் "இந்திய சினிமா" என்கிற நீரோட்டத்துக்குள் இணைகிற அளவாவது மத்திய அரசு அப்பிராந்தியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அந்த மண்ணின் கலைஞர்களின் ஆதங்கம்.

 

லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

ஷிமோகா: ஷிமோகாவில் உள்ள லிங்கனமக்கி அணை அருகே லிங்கா படப்பிடிப்பை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஷிமோகா மாவட்டத்தில் உள்ள

லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

லிங்கனமக்கி அணை அருகே நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான அந்த அணை அருகே படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றும், அதை உடனே

ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

ஆசியா கண்டத்திலேயே மிக குறைந்த செலவில் நீர்மின் உற்பத்தி செய்யும் பெருமை லிங்கனமக்கி அணைக்கு உள்ளது. இந்த அணையின் மீது இப்போது அனைவரின்

பார்வையும் பதிந்துள்ளது.

இந்த அணையின் சுற்றுப்பகுதிகளில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை செய்யப்பட்ட இடத்தில் ரஜினிகாந்த்

நடிக்கும் "லிங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்திருப்பது விவேகமற்ற செயலாகும்.

மாநில அரசு உடனடியாக லிங்கனமக்கி அணை அருகில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, அந்த இடத்தில் நடந்துள்ள படப்பிடிப்பின்

ரீல்களை வசப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளிக்கு 'ஐ' வந்தாலும் 'கத்தி' ரிலீஸாவது உறுதி

சென்னை: தீபாவளிக்கு விக்ரம் நடித்துள்ள ஐ படம் வந்தாலும் கத்தி படம் ரிலீஸாவது உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு விஜய் நடிக்கும் கத்தி, விஷாலின் பூஜை, கமலின் உத்தம வில்லன், தனுஷின் அனேகன், சிவகார்த்திகேயனின் டாணா என்று பல படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு 'ஐ' வந்தாலும் 'கத்தி' ரிலீஸாவது உறுதி

இந்த அறிவிப்பை அடுத்து தீபாவளி ரேசில் வரவிருந்த சில படங்கள் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் படம் ரிலீஸாவதால் தீபாவளிக்கு தங்களின் படத்தையும் வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து கத்தி படக்குழுவிடம் கேட்டதற்கு அவர்கள் கூறுகையில், கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்றனர்.

இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு வகை வகையான கலை விருந்து உண்டு.

 

சென்னையில் ஷூட்டிங்.. அனுமதி கோரி ஜெ.வுக்கு பெட்டிஷன் போட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்!

சென்னை: சென்னையில் படப்பிடிப்பு நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் முதல்வர் தனிப்பிரிவில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில்,

நலிந்து கிடந்த தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஊக்கமளிக்க சிறந்த திரைப் படங்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்படுகிறது. கதையின் பின்புலம், ஒருசில தணிக்கை குழு உறுப்பினர்களின் மனோ பாவம் காரணமாக சில நல்ல படங்களுக்கும் ‘யு/ஏ' சான் றிதழ் கிடைக்கிறது. இந்த சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இதைத் தவிர யு' சான்றிதழ் படங்களுக்கும், ‘யு/ஏ' சான்றிதழ் படங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் விருதுகள் ‘யு/ஏ' சான்றி தழ் படங்களுக்கும் வழங்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள யு/ஏ சான்றிதழ் படங்களுக்கும் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கவேண்டும்.

திருட்டு விசிடி, கேபிள் டிவி மற்றும் தனியார் பஸ்களில் திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை திரையிடுவதை தடுக்க வேண்டும்.

சென்னை மாநகரில் தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு அண்டை மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். ஆனால், சிறுபட்ஜெட்டில் படங்கள் எடுப்பவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, சென்னையில் (மெட்ரோ ரயில் பணிகள் நடக் கும் இடங்கள் தவிர்த்து) படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

அண்டாவ காணோம்... மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டி!

திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டியை நினைவிருக்கிறதா... அந்தப் படத்துக்குப் பிறகு, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

கணவருடன் தயாரிப்பு வேலைகளில் கொஞ்ச காலம் கவனம் செலுத்தினார். விஷால் நடித்த தோரணை, வெடி ஆகிய படங்களுக்கு இவர்தான் இணை தயாரிப்பாளர். ஆனால் விஷால் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு அந்த வேலையும் இல்லாமல் போனது.

அண்டாவ காணோம்... மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டி!

ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டிக்கு கிடைத்துள்ள முதல் படம் அண்டாவ காணோம். இயக்குபவர் புது இயக்குநர் வேல். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.

"சுசீந்திரனின் முன்னாள் உதவியாளர் வேலு என்னிடம் வந்து அண்டாவ காணோம் கதையைச் சொன்னார். எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. முழுக்க முழுக்க திறமையைக் காட்ட வேண்டிய பாத்திரம். உடனே ஒப்புக் கொண்டேன். எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும் இந்தப் படம்," என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற தலைப்புகளில் படமெடுத்த லியோ விஷன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

 

மஹாலை திறந்து வைக்க ரூ.3.5 கோடி கேட்டாரா சல்மான் கான்?

மும்பை: லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பத்தாரின் மஹாலை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.3.5 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சல்மான் கானுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். அதிலும் இங்கிலாந்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பம் ஒன்று அங்கு மஹால் ஒன்றை கட்டியுள்ளது. அந்த மஹாலை சல்மான் கான் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

மஹாலை திறந்து வைக்க ரூ.3.5 கோடி கேட்டாரா சல்மான் கான்?

இரண்டு நாட்கள் நடக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் சல்மானிடம் கேட்க அவரும் சரி என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஹாலை திறந்து வைக்க சல்மான் ரூ.3 கோடி கேட்டாராம். மேலும் தனது ஊழியர்கள் லண்டன் வரும் செலவு மற்றும் அவர்கள் தங்கும் செலவுக்காக ரூ.50 லட்சம் அளிக்குமாறும் அவர் கேட்டாராம்.

இது குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் உடனே சல்மானை அணுகியுள்ளனர். ஆனால் அவரது செய்தித் தொடர்பாளரோ இந்த செய்தி முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார்.

 

கத்தி படத்தில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்

சென்னை: கத்தி படத்தில் விஜய் மக்கள் பிரச்சனையை தீர்க்க போராடுகிறாராம்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையிலேயே இசையை வெளியிடுகிறார்கள்.

கத்தி படத்தில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்

குளிர்பான நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து படம் நகர்கிறதாம். படத்தில் விஜய் மக்களுக்காக எப்படி குரல் கொடுக்கிறார், பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை தீர்க்கிறார் என்பது தான் கதையாம்.

கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தில் விஜய் அனிருத் இசையில் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் லிங்கா பர்ஸ்ட் லுக்!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் முதல் தோற்ற படங்கள் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது.

ரஜினி - சோனாக்ஷி - அனுஷ்கா ஜோடியாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லிங்கா.

கடந்த மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் தொடங்கியது. 40 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், அதே சூட்டோடு ஹைதராபாதில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் லிங்கா பர்ஸ்ட் லுக்!

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இப்ப்போது ஷிமோகாவில் நடந்து வருகிறது. இன்னும் மூன்று வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இதுவரை படத்தின் ஸ்டில்கள் எதுவும் மீடியாவில் வெளியாகாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் ஸ்டில்கள் மற்றும் ரசிகர்கதள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டரை வரும் விநாயகர் சதுர்த்தி (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்று காலையிலேயே போஸ்டர் வெளியாகிவிடும் என்று அப்படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.

 

அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!!

இயக்குநர் களஞ்சியம் உயிருக்குப் போராடுவதாக அவரது நண்பர்கள் அறிக்கை, அஞ்சலியிடமிருந்து எப்படியாவது பணம் பறிக்க போட்ட நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆந்திராவில் ஓங்கோல் அருகே விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறார் களஞ்சியம் என்று முதலில் செய்தி வெளியிட்டார்கள். அடுத்து ஓங்கோல் மருத்துவமனையிலிருந்து திடீரென அவர் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறி, சுய நினைவே இல்லாமல் கிடக்கும் களஞ்சியத்தை அஞ்சலிதான் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று கோர்த்துவிட்டார்கள், அவரது நண்பர்கள்.

அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!!

களஞ்சியம் விபத்துக்குள்ளானால், அஞ்சலி என்ன செய்ய முடியும் என்ற கேள்வியுடன்தான் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள் நேற்று. இன்றோ, களஞ்சியம் அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன் அம்பலமாக்கிவிட்டார்கள்.

அவர் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதில் கை மற்றும் தோளில் சிறு சிராய்ப்புகளுடன் காணப்படும் களஞ்சியம் , நல்ல நிலையில் காட்சி தருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், "களஞ்சியம் நன்றாகத்தான் இருக்கிறார். லேசான சிராய்ப்புகள்தான். அவரை பொது வார்டில்தான் வைத்திருக்கிறோம். அவரது உதவியாளர்கள் நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தனர்," என்றனர்.

இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, "கடந்த வாரம் வரை என்னை எப்படியெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார் களஞ்சியம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதாவது அவரது உண்மை முகம் என்னவென்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவர் பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் இழந்த பணமும் சொத்தும்தான் ஏராளம். நியாயமாக நான்தான் அவர்மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். இப்போது நான் என்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். தேவையின்றி என் பெயரை யாரும் எதிலும் இழுக்க வேண்டாம்," என்றார்.

 

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பி.பி.சீனுவாசஸ் மகனுடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். அவருடன் பிரபல முன்னணி பாடகர் பி.பி.சீனுவாஸ் மகன் பி.பி.எஸ்.பணீந்தர் உடன் வந்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்

பாடகி ஜானகியை பொதுதீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் பாடகி எஸ்.ஜானகி சிற்றம்பலமேடை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார்.

பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினர். பின்னர் நடராஜர் கோயிலுக்குள் உள்ள தில்லை ஸ்ரீகோவிந்தராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு புறப்பட்டு சென்றனர்.

 

பிஸி சூட்டிங்… லீவ் போட்டுவிட்டு காதலுடன் டூர் போன யோகா நடிகை

சென்னை: ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற யோகா நடிகை தற்போது சூட்டிங்கிற்கு லீவ் போட்டுவிட்டு யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் டூர் போயிருக்கிறாராம்.

சூப்பர் நடிகருடனும், தல நடிகருடனும் தமிழில் நடித்து வருகிறார் யோகா நடிகை. அது மட்டுமல்லாது தெலுங்கு படங்களுக்காக கிலோ கணக்கில் நகையைப் போட்டு நடித்த யோகா நடிகை அதிகம் சோர்வடைந்து விட்டாராம்.

கடந்த ஒரு வருடமாக இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்றது, வாள் சண்டை, குதிரை ஏற்ற பயிற்சிகளும் பெற்றது அயர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததால் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருந்தது வேறு மேலும் டென்ஷனை அதிகரித்துவிட்டதாம்.

தற்போது தனது பணிகளை பெரும்பகுதி முடித்துவிட்ட யோகா நடிகை வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து குடும்பத்தினரிடம் மட்டும் தான் எங்கு செல்கிறேன் என்பதை தெரிவித்தார். மற்றவர்களிடம் டூர் செல்வதாக மட்டும் கூறிவிட்டு பறந்து விட்டாராம்.

யோகா நடிகையுடன் அவரது ரகசிய காதலனும் அவருடன் சென்றுள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் திரும்பி வந்து மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானிற்கு நிழலுலக தாதாக்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு நெருக்கமான தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கரீம் மொரானியும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மும்பையிலுள்ள கரீம் மொரானி வீட்டுக்கு வெளியே நின்றபடி 3 பேர் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு கரீம் மொரானியின் செல்போனுக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது.

நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

நிழலுலக தாதா ரவி பூஜாரிதான் இந்த மிரட்டல்களுக்கு காரணம் என்று கரீம் மொரானி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரவி பூஜாரி கோஷ்டியால் ஷாருக் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து ஷாருக்கானிற்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் பணத்துக்காக நிழலுலக தாதாக்களிடமிருந்து மிரட்டல்களை எதிர்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தாவுத் இப்ராகிம், சோட்டா சகீல், ரவி பூஜாரி ஆகியோர் இந்த தாதாக்களில் முக்கியமானவர்கள்.

 

திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!

சென்னை: திமுக வழங்கும் முப்பெரும் விழா விருதுகளில் நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.

திமுக ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது.

திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!

இந்த விழாவில் பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் பெயரில் விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகளை திமுக அறிவித்துள்ளது.

விருது பெறுவோர் விவரம்: பெரியார் விருது-பெங்களுர் வி.டி.சண்முகம்; அண்ணா விருது-முனைவர் ஜான்; பாவேந்தர் விருது-புதுக்கோட்டை விஜயா; கலைஞர் விருது-நடிகர் குமரி முத்து.

 

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி

கொச்சி: கேரள அரசு மது பார்களை மூட உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். இனி பெண்கள் நிம்மதியாக, பயமின்றி நடமாட இது உதவும் என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.

கொச்சியில், கல்லூரி, பள்ளி வளாகங்களில் போதை பொருட்களை அனுமதிக்கக் கூடாது எனவும், மாணவர்களிடம் போதையின் தீமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி

இதில் 12 ஆயிரம் கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நடிகர் மம்முட்டி இதில் கலந்து கொண்டு பேசினார்.

மம்முட்டி அப்போது கூறுகையில், கேரள அரசு பூரண மதுவிலக்கை மாநிலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது பாராட்டுக்குரியது. கேரளாவில் பூரண மதுவிலக்கு, மது ஒழிப்பு கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளது. நானும் இது தொடர்பான போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.

தற்போது மாநிலத்தில் உள்ள மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் இனி பெண்கள் பயமின்றி வெளியில் நடமாடும் சூழ்நிலை உருவாகும். இது மிகவும் நல்ல முடிவு என்றார் மம்முட்டி.

 

ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

நெல்லை: எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ 10 லட்சம் காப்புத் தொகை செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

மோகன் லால் - மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நாயகனாக கமல் ஹாஸன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கவுதமி.

ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்த போது தனக்கு விவரம் தெரியவில்லை. எனவே தமிழ் ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சதீஷ் பால் மனுத்தாக்கல் செய்தார்.

சதீஷ் பால் நாவலைப் படித்துவிட்டு த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த நீதிபதி, இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், காப்புரிமை சட்டப்படி குற்றமாகும் என்கு கூறி தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்தார். படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றால் ரூ 10 லட்சத்தை காப்புத் தொகையாகக் கட்டிவிட்டு தொடங்கலாம் என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டார்.

இதனை ஏற்று ரூ 10 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர் கமல் மற்றும் படக்குழுவினர்.

திருநெல்வேலியின் எழில் மிகுந்த பகுதிகளில் பாபநாசம் படப்பிடிப்பு நடக்கிறது.

 

அபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள்! - எஸ்பி முத்துராமன் வாழ்த்து

தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தன் 68வது பிறந்த நாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரஜினி நடித்த ப்ளட்ஸ்டோன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் அபிராமி ராமநாதன். அபிராமி மெகாமால் மூலம், திரையரங்குகளின் தோற்றம் மற்றும் நடத்தும் விதத்தை மாற்றியவர்.

சிவாஜி படத்தை அதிக அரங்குகளில் வெளியிட்டு, படம் திரையிடும் போக்கையும் மாற்றியவர் அவர்தான். தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.

அபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள்! -  எஸ்பி முத்துராமன் வாழ்த்து

அபிராமி ராம நாதன் தன்னுடைய 68 வதுபிறந்த நாளை இன்று இன்று கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது இயக்குனர்கள் எஸ்.பி முத்து ராமன், அரவிந்த் ராஜ், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, நடிகர் கருணாஸ், அபிராமி ராமநாதன் மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் ஆர்.சிவலிங்கம், மகள் மீனாட்சி பெரிய கருப்பன், மருமகன் பெரிய கருப்பன், பேரன் அண்ணாமலை, பேத்தி மீனாட்சி மற்றும் பலர் வாழ்த்தினர்.

முன்னதாக அயனாவரம் அருவி ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,முதியோர்களுக்கு இலவச உடை, பேக், உணவு வழங்கினார் அபிராமி ராமநாதன்.

 

'பப்'பில் குடிபோதையில் தள்ளாடிய நடிகையின் மகள்

மும்பை: நம்ம ஊரு மயிலு நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கு ஏற்கனவே திருமணமான இயக்குனரை திருமணம் செய்து மும்பையில் செட்டிலானவர் மயிலு நடிகை. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளை அவர் நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. விருது விழாக்கள் என்று தான் எங்கு சென்றாலும் மகளையும் அழைத்து செல்கிறார்.

மகள்களுடன் மயிலு நடிகையும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. இத்தனை வயதான ஒருவர் இப்படியா நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மகளுக்கு பப் கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்ததே நடிகை தான் என்றும் கூறப்படுகிறது.

அம்மா கற்றுக் கொடுத்து கலாச்சாரத்திற்கு மகள் அடிமையாகிவிட்டார் என்று கூட பேசப்படுகிறது. நடிகையின் பெயரை மகள் கெடுத்துவிடுவார் போல என்று சிலவிமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

விஜய்- சங்கீதா... திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகள்!

சென்னை: இளைய தளபதி விஜய், சங்கீதா தம்பதி தங்களது 15வது திருமண நாளில் அடியெடுத்து வைக்கின்றனர்.

விஜய் இலங்கை தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த தனது ரசிகை சங்கீதாவை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய்- சங்கீதா... திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகள்!

இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்களுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனைவி சங்கீதா பற்றி கூறுங்களேன் என்று விஜய்யை கேட்டால் அவர் அடிக்கடி சொல்வதாவது,

கஷ்ட காலங்களில் கூட என்னை வழிநடத்துவது என் மனைவியின் அளவு கடந்த அன்பு தான் என்பதாகும்.

வாழ்த்துக்கள் விஜய், சங்கீதா.

 

சுந்தர் சியுடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

அரண்மனை படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் இயக்குநர் சுந்தர் சியுடன் விவாதத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் வருகிறார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களை மையப்படுத்தித்தான் கதையே நகருவதால் மற்ற பாத்திரங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு காட்சிகள் வெட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

சுந்தர் சியுடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

ராய் லட்சுமி, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை சுந்தர்.சி நீக்கிவிட்டதாகவும், இதனால் ராய் லட்சுமி சுந்தர்.சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதை ராய் லட்சுமி முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பிஆர்ஓ மூலம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், "அரண்மனை' படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் வதந்திதான்.

நான் படத்தைப் பார்த்தேன். அதில், என்னுடைய காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எனக்கும் சுந்தர்.சிக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை. நான் நடித்துள்ள ‘அரண்மனை' ‘இரும்பு குதிரை' ஆகிய படங்கள் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

 

விஜய்யையும் முருகதாஸையும் லைகாகாரர்கள் மிரட்டிட்டார்களாமே!

இப்படி ஒரு கதை சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

கத்தி படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொண்டால் போதும், சிக்கலின்றி படம் வெளியாகும் என்பதுதான் படத்தின் தற்போதைய நிலை.

அதாவது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது கத்தி படத்துக்கு எதிரானதுதான். நடிகர் விஜய்க்கோ, இயக்கநர் ஏ ஆர் முருகதாசுக்கோ எதிரானதல்ல என்று தெளிவாக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.

விஜய்யையும் முருகதாஸையும் லைகாகாரர்கள் மிரட்டிட்டார்களாமே!

எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமும் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டோம்.

இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம்.

இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!

 

ரூ 10 லட்சம் கட்டுங்க... இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்! - கேரள நீதிமன்றம்

கொச்சி: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு முன் நீதிமன்றத்தில் ரூ 10 லட்சத்தைக் கட்டுமாறு இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு தடைகேட்டு எழுத்தாளர் சதீஷ் பால் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததையும், அந்த வழக்கில் இந்தப் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதையும் ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த சதீஷ் பால் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற நாவல்தான் த்ரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் கதை. நாவலைப் படித்தபிறகு, த்ரிஷ்யம் படத்தைப் போட்டுப் பார்த்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி விஎஸ் வாசன் குற்றச்சாட்டை உறுதி செய்தார்.

ரூ 10 லட்சம் கட்டுங்க... இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்! - கேரள நீதிமன்றம்

இந்த வழக்கில் அவர் அளித்துள்ள தீர்ப்பில், "ஒரு மழைக்காலத்து நாவலுக்கும் த்ரிஷ்யம் படத்துக்கும் மிகச் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. மற்றபடி அந்த நாவலைத் தழுத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை விதி மீறலாகும்.

த்ரிஷ்யம் படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே ரூ 10 லட்சத்தை பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்," என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் படத்துக்கு தமிழில் பாபநாசம் என தலைப்பிடப்பட்டு, பூஜையும் போடப்பட்டுவிட்டது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல கமல் தயாராக இருந்த நிலையில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

அநேகமாக, நீதிமன்றம் சொன்ன தொகையைச் செலுத்தி, படப்பிடிப்புக்குச் செல்லவே கமல் விரும்புவார் என்று தெரிகிறது.