சென்னை: தனது 22 ஆண்டு கால சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள், மீடியா மற்றும் ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
விஜய் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 23-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறினார்.
22 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விஜய் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி கூறியுள்ளார்.
தன்னை நாயகனாக வைத்து ஆரம்பத்தில் படம் தயாரித்த பிவி கம்பைன்ஸ் பி விமல், ஸ்ரீமாசானியம்மன் மூவீஸ் சவுந்தரபாண்டியன், ஆஸ்கார் மூவிஸ் நேஷனல் எம் பாஸ்கர், பாலாஜி பிரபு, ஸ்ரீசாய்ராம் மூவீஸ் ஸ்ரீதேவி, ஸ்ரீவிஜயலட்சுமி மூவிலேண்ட், எம்எஸ்வி முரளி, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி, குமார் மூவீஸ் எம்மார், செவன்ந்த் சேனல் நாராயணன், பவித்திரன், எம்ஜி பிக்சர்ஸ் சேகர், சந்தானம், ஏஎம் ரத்னம், கே ஆர்ஜி, மோகன் நடராஜன், கலைப்புலி தாணு, அய்ங்கரன் கருணாமூர்த்தி, சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல தன்னை இயக்கிய, விக்ரமன், செல்வபாரதி, பாசில், கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களுக்கும், உடன் நடித்த சக கலைஞர்களுக்கும், 24 யூனியன்களைச் சேர்ந்த டெக்னீஷியன்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் சரியான விமர்சனங்கள் தந்து, நிறை குறைகளைக் கூறி இந்த உயரத்துக்கு தான் வர உதவிய மீடியா நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியா, எந்த கைம்மாறும் கருதாமல் தன் மேல் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.
Post a Comment