சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்துக்காக கத்திச் சண்டைப் பயிற்சி பெற்று வருகிறார் நடிகை ஹன்சிகா.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேன்டசி கதையாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி தமிழில் மறுப்பிரவேசம் செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கான உடைகளை இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைக்கிறார்.
சரித்திரமும் புதுமையும் கலந்த இந்தப் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடிக்கிறாராம். இதற்காக முறையான கத்திச் சண்டைப் பயிற்சியையெல்லாம் அவர் எடுத்திருக்கிறாராம்.
முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூலில் பங்கேற்கும் ஹன்சிகா, "கொஞ்சம் பயமாகவும் ஆவலுடனும் காத்திருக்கிறேன். இளவரசி எந்த நேரமும் சண்டை போடத் தயார்," என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தை, விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தர்களான தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றனர்.
Post a Comment