ஓய்வுக்காக இமயமலை போகும் விஷால்!

|

தன் அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு முன் ஓய்வெடுக்க இமயமலைக்குச் செல்கிறார் நடிகர் விஷால்.

முன்பெல்லாம் அடிக்கடி இமய மலை சென்று வருவார் ரஜினி. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் இமயமலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

இப்போது ரஜினி வழியில் விஷாலும் இமயமலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகாவுடன் அவர் நடிக்கும் ‘ஆம்பள' படப்பிடிப்பு விரைவில் முடியப் போகிறது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதற்கு முன்பே இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாராம் விஷால்.

ஓய்வுக்காக இமயமலை போகும் விஷால்!

ஆம்பள படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். காஜல் அகர்வால் ஜோடி சேர்கிறார்.

இப்பட வேலைகள் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பே இமயமலைக்குப் போய் சில வாரங்கள் தங்கியிருக்கப் போகிறாராம்.

விஷால் கடைசியாக 2011-ம் ஆண்டு இமயமலை சென்றார். அதன் பிறகு இப்போதுதான் செல்கிறார்.

இனி ஆண்டுக்கு ஒரு முறை மலையேறப் போகிறாராம்!

 

Post a Comment