ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா... சிகாகோவில் லிங்கா கொண்டாட்டங்கள்!

|

சிகாகோ: அமெரிக்காவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது ரஜினியின் லிங்கா.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டும் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, இந்திப் பதிப்புகள் வெளியாகும் அரங்குகளின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 400 அரங்குகளைத் தாண்டுகிறது. இது வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமை.

ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா... சிகாகோவில் லிங்கா கொண்டாட்டங்கள்!

சிகாகோ நகரிலும் கணிசமான அரங்குகளில் லிங்காவை வெளியிடுகிறார்கள், அங்குள்ள எக்ஸ் எல் மேக்ஸ் அரங்கம் உள்பட. படத்தைக் கொண்டாட இப்போதே தயாராகிவிட்டனர் ரஜினி ரசிகர்கள். வரும் சனிக்கிழமையன்று சிகாகோவில் உள்ள தக்ஷின் இந்திய உணவகத்தில் லிங்கா சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகளின் பெயர்களையே வைத்துள்ளனர்.

ட்ராம்போலின் குல்பி, அனுஷ்கா அவியல், சந்தானம் ஹல்வா, மனோபாலா மட்டன் பிரியாணி என்று போகிறது பெயர்ப் பட்டியல்!

சிவாஜி படம் வெளியானதிலிருந்து முதல் டிக்கெட்டை கோல்டன் டிக்கெட் என்ற பெயரில் சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத் தலைவருக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் லிங்காவின் கோல்டன் டிக்கெட் அப்பகுதி ரஜினி ரசிகர் மன்றத் தலைவருக்கு வழங்கப்படும்.

லிங்காவுக்கான சிகாகோ ரசிகர் கொண்டாட்டங்களை facebook.com/lingaachicago பக்கத்திலும் பார்க்கலாம்.

 

Post a Comment