சென்னை: ஆண்டுதோறும் படிக்க வசதியில்லாத 25 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் நடிகர் விஜய், இந்த வருடமும் அதே போன்று 25 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
தனது மக்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த உதவிகளை செய்து வரும் விஜய் தேர்ந்தெடுத்த மாணவர்களின் முழுகல்விச் செலவையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.
அதே போன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவ,மாணவியருக்கான நோட்டு மற்றும் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறார்
இந்த வருடமும் 5 லட்சம் நோட்டு மற்றும் புத்தகங்களை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைத்த நடிகர் விஜய் அவற்றை தனது மக்கள் நற்பணி மன்றத்தின் மூலமாக விநியோகம் செய்ய சொல்லியுள்ளார்.
மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மூலமாக இவை விநியோகம் செய்யப் படும். ஏற்கனவே நாடையே அதிர வைத்த நேபாள பூகம்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை நடிகர் விஜய் தனது மக்கள் நற்பணி மன்றத்தின் மூலமாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment