சென்னை: அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தில் அட்டக்கத்தி நாயகன் தினேஷும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது.
ரஜினி படம் என்றாலே ஒருவித பரபரப்பு எல்லோருக்கும் வந்து விடுகிறது. ரஜினி புதிதாக மூன்று படங்களில் நடிக்கிறார், இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் ரஞ்சித்துடன் இணைகிறார், படத்தில் ஹீரோயின் கிடையாது இது ஒரு கேங்க்ஸ்டார் பற்றிய படம் மற்றும் புதிய படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்ற வதந்திகளுக்கெல்லாம் நேற்று தான் படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதற்குள் இன்னொரு பரபரப்பு கிளம்பி விட்டது. அதாவது இந்தப் படத்தில் ரஜினியுடன் இன்னொரு இளம் ஹீரோவும் நடிக்கப் போகிறாராம். ஹீரோயின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தேர்வு எல்லாம் முடிந்தவுடன் தான் அதைப் பற்றி முறையாக தெரிவிக்க இருக்கின்றனராம்.தற்போதைய நிலவரப்படி கதாநாயகியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
ரஜினியுடன் நடிக்க இருக்கும் அந்த இன்னொரு ஹீரோ ரஞ்சித்தின் முதல் பட ஹீரோ அட்டக்கத்தி தினேஷ் என்கிறார்கள், படம் முழுவதும் வரும் வேடத்தை தினேஷுக்கு கொடுக்க இருக்கிறாராம் ரஞ்சித்.
படத்தில் ஒரு முக்கியமான வேடத்தை தினேஷுக்கு கொடுக்க இருக்கும் ரஞ்சித், படத்தில் நடிக்க இருப்பவர்களின் தேர்வு முடிந்தவுடன் இதைப் பற்றி கடைசியாக தெரிவிப்பார் என்று கூறுகிறார்கள்.
Post a Comment